வாதம் – மூட்டு வலிக்கான காரணங்கள்
மனிதனுக்கு மிகுந்த வலியும், வேதனையும் தருவது இந்த வாத நோய், வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் வாத நோயால் பாதிக்கப்பட நேர்கிறது.
பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாக, மனிதன் தன் உடல் உறுப்புக்களை இயக்கக் கற்றுக் கொண்டான். படைப்பின் கொடையாகிய இந்த உயர்ந்த இயக்கத்தை, போதிய அளவில் இல்லாமல், குறைவாகவோ, அதிகமாகவோ பயன்படுத்தினால் வரும் பாதிப்புகளைப் பின்னரே அறிய நேர்ந்தது.
தனது அன்றாட வாழ்வின் செயல்பாடுகளைக் கூட “கணினி” மூலம் இயக்கும் அளவு அறிவுத்திறன் மிக்க, மிக உயர்ந்த படைப்பான மனித குலத்துக்கு, அந்தக் கணினியைவிட மிக மிக நுணுக்கமான மெக்கானிசம் கொண்ட முதுகுத்தண்டு மற்றும் பிற உறுப்புக்களை இயற்கை வழங்கி இருக்கிறது. உடல் உறுப்புக்களில் நிகழும் மெல்லிய அசைவுகளால் பலவிதமான நிகழ்வுகள் நடக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள், மூட்டுகளில் ஏற்படும் தடையில்லாத அசைவுகளால் உடல் இயக்கம் நடக்கிறது.
ஆனால் உடலின் மூட்டுகளின் வடிவமைப்பிலோ, செயல்பாடுகளிலோ மாறுதல் நடக்கும் போது, நமது செயல்பாடுகள் ஸ்தம்பிக்கின்றன. மூட்டுக்கள் மற்றும் அவற்றுக்கிடையே இருக்கும் மெல்லிய திசுக்களின் பாதிப்பால், நாம் முடமாகி, பிறரைச் சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது.
மனிதனுக்கு மிகுந்த வலியும், வேதனையும் தருவது இந்த வாத நோய், வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் வாத நோயால் பாதிக்கப்பட நேர்கிறது. சிலர் இந்நோயை, நோய் என்றுகூட அறியாமல் வாழ்வின் ஒரு கட்டமாக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். சிலருடைய வாழ்வில் இந்நோய் அறியப்பட முடியாமல் போகிறது. பலருக்கு இதைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லாமல், நோய் தீவிரமடைந்து போகிறது.
‘ஆர்த்தரைட்டிஸ்’ என்றால் என்ன?
இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:
ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.
ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.
சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.
கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.
செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.
மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்
நோய்க்கான காரணங்கள்
* மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
* மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
* தேய்ந்து போதல் (வயது காரணமாக).
* படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
* உடல் சோர்ந்து போதல்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
* நோய்த் தொற்று – (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
* கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல).
வாத நோய்க்கான அறிகுறிகள்:
* மூட்டுக்களில் வலி.
* மூட்டுக்களில் வீக்கம்.
* மூட்டுக்களில் இறுக்கம்.
* மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
* லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
* பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.
* உடல்வலி, சோர்வு.
* எடை குறைதல்.
* தூக்கமின்மை.
* தசைகளில் வலி.
* மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).
* மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.
ஆர்த்தரைட்டிஸ் பற்றிய ஆயுர்வேதத்தின் கொள்கை
எந்த நோயும், அது உருவாகவும், தீவிரமடையவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தோஷங்கள் அதிகமாவதும் அல்லது ஓரிடத்திலேயே தேங்கி, விடுவதுமே காரணம் என்பது ஆயுர்வேத கூற்று. நிலைப்பாடு மாறிய தோஷம், தோஷங்கள் வலுக்குறைந்த இடங்களில் (தாதுக்களில்), குறிப்பாக, எலும்புகள், மூட்டுக்கள், தசைகள், எலும்புகளின் மேலுள்ள கவசம் போன்ற உறைகள், எலும்பிலிருந்து தசைகள் ஆரம்பிக்கும் டென்டன் என்ற பகுதிகள் ஆகியற்றில் தங்கி விடும். அதனால் ஆர்த்தரைட்டிஸ் உண்டாகும்.
தோஷங்களின் பங்கு
மூட்டுக்களின், இயல்பான, தடையில்லா அசைவுகளில் மூன்று தோஷங்களுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. மூன்றும் சமநிலை தவறாது இருக்கும் போது, இயல்பு நிலை சாத்தியமாகிறது.
கப தோஷம்
மூட்டுக்கள் கப தோஷத்தை சார்ந்தவை. மூட்டுக்களின் கிடையே உராயிவைத் தடுக்கும், மூட்டுக்களின் உறுதிப்பாடு, நிலைப்பாடு ஆகியவற்றுக்குக் காரணமாகிறது-. மூட்டுக்களுக்கு போஷாக்கைத் தருகிறது. கப தோஷம் குறையும் போது, மூட்டுக்களின் ஸ்திரத்தன்மை குறைகிறது. எண்ணெய்ப்பசை குறையும் போது, வறட்சி உண்டாகிறது. அதன் காரணமாக நோய்த்தொற்று வரலாம்.
கப தோஷம் அதிகமாகும் போது, நீர் தேங்கி வீக்கம் வரும். கப தோஷம் மாறுபாட்டால் ஆர்த்தரைட்டிஸ் வரும் போது தோன்றும் அறிகுறிகள்
* அதிக எடை கூடி இருப்பதாக உணரல்.
* இறுக்கம், சூடு குறைந்திருத்தல்.
* ஈரப்பசை அதிகமாக இருப்பதாகத் தோன்றல்.
* உடல் அசைவுகள் குறைதல்.
* அதிகாலையில் வலி அதிகரித்தல்.
* குளிர்காலம்.
* மேகமூட்டமான சமயங்கள்.
* இளவேனில் காலங்களில் வலி அதிகரித்தல்.
* மன அழுத்தம் காரணமாக.
* தனக்குள்ளேயே முடங்கிப் போவதனாலும் வலி அதிகமாதல்.
* வேலை மற்றும் இயக்கம் குறைவதால் வலி அதிகமாதல்.
* உணவு எடுத்துக் கொண்டபின் வலி அதிகமாதல்.
* புளிப்பு, இனிப்பு, உப்புச்சுவைகள் வலியை அதிகரிக்கும்.
* குளிர்ச்சியான, அதிகம் எண்ணெய்ப் பொருட்கள், பழைய உணவுகள் வலியை அதிகமாக்கும்.
வாத தோஷத்தால் ஆர்த்தரைட்டிஸ் வரும் போது காணப்படும் அறிகுறிகள்:
வாத தோஷம் இயல்பான இயக்கத்துக்கு உதவும் வாத தோஷம் மூட்டுக்களின் இலகுவான இயக்கத்தைக் காக்கும் சரியான எண்ணெய்ப்பசைத் தன்மை இருந்தால் தான் வாதம் இவற்றைச் செய்ய முடியும்.
* கபமும்
* வாதமும் சமநிலையில் இருந்தால் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்ளும் மாறாக கப தோஷம் அதிகமாகும் போது.
* வாதம் இயங்குவதற்கான இடம் குறுகி விடுகிறது-. ஏனெனில் கபம் அதிகமாகும் போது திரவங்கள் அதிகரித்து விடுகிறது.
* அதற்கு மாறாக
* வாதம் அதிகமாகும் போது
* கபத்தைக் குறைக்கும், அதனால் மூட்டுக்களின் வடிவமைப்பு மாறும்.
அறிகுறிகள்
வாதம் நிலை மாறும் போது:
* கடுமையான வலி.
* வீக்கம், (பையில் காற்று அடைத்தது போல) அசையும் போது சப்தம்.
* அசைவின் போது வலி, காலையிலும்.
* இரவிலும் வலி அதிகமாகும்.
* மழை, குளிர்.
* மேகமூட்டம் மிகுந்த நாட்களில் வலி அதிகமாகும்.
* வெயில் காலத்தில் வலி குறையும்.
* பசி, தூக்கம், சிறுநீர் கழித்தல் ஆகிய இச்சைகளைக் கட்டுப் படுத்துவதாலும்.
* செயற்கையாக உந்துவதாலும் வலி அதிகமாகும்.
* அதிக கோபம்
* பயம்.
* மன அழுத்தம் காரணமாக வலி அதிகமாகும்.
* சூடான, கசப்பான சுவையுள்ள உணவுகள்.
* குளிர்ச்சியான உணவுகள்.
* பொரித்த உணவுகள், பழைய உணவுகள் இவற்றால் வலி அதிகமாகும்.
* அதிகப்படியான உடற்பயிற்சி வலியை அதிகமாக்கும்.
* வெது வெதுப்பான சூழல்.
* சூடான கால நிலை வலியைக் குறைக்கும்.
பித்ததோஷம்
மூட்டுக்களில் வளர்ச்சிதை மாற்றம் நடைபெறக் காரணமாகும், மூட்டுக்களில் வெதுவெதுப்பான சூழலைத்தரும்.
– நோய் தொற்று வராமல் தடுக்கும்.
– கிருமிகளை அழிக்கும்
– கபத்துடன் சேர்ந்து மூட்டுக்களில் லூப்ரிக்கேசனைக்காக்கும்.
– அதிக உஷ்ணதன்மை காரணமாக குளிர்ந்த தன்மையுடைய 2 பொருட்களையும் அதாவது வாதம், கபம், இரண்டையும் சமநிலைப்படுத்தும்.
– நீர் கோர்ப்பதால் வலி அதிகமாகும்.
அறிகுறிகள்
பித்தம் அதிகமாகும்போது, மூட்டுகளில் வலி
– வலி மிகுந்து எரிவது போன்றிருக்கும். வெதுவெதுப்புத்தன்மை இருக்கும்.
– கடுமையாக நீர் கோர்த்து வீங்கும்.
– வெந்து காணப்படும்
– இயக்கமே குறையும்
– மதிய வேளைகளில் வலி அதிகரித்து மாலையில் குறையும்
– வெயில் காலம், இலையுதிர் காலத்தில் வலி அதிகமாகும்
– குளிரில் வலி குறையும்.
– கோபம், பொறாமை, வெறுப்பு, ஆகிய, குணங்கள், வலியை அதிகரிக்கும்.
– புளிப்பு, உப்புச்சுவை, பொருட்கள், சூடான பொருட்கள், பொரித்த மசாலா உணவுகள் வலியை அதிகரிக்கும்.
வெயில் நெருப்பு அதிக உஷ்ணம் ஆகியவற்றுக்கு அருகே நீண்ட நேரம் இருந்தால் வலி அதிகரிக்கும்.
இதைப்போலவே இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தோஷங்களில் மாறுபாடு நேர்ந்து ஆர்த்தரைட்டிஸ் வரும் போது எந்த தோஷம், அதிகம் பாதிக்கப்படுகிறதோ அதற்கான அறிகுறிகள் மிகுந்திருக்கும்.
சரிவர செரிமானம் ஆகாத பொருட்கள் கடைசிவரை செரிக்கப்படாத போதும் செல்களால் போஷாக்காக உறிஞ்சப்படாத போதும் அந்த நிலை ஆமம் எனப்படுகிறது. இது சரியான செரிமானம் இல்லாத காரணத்தால் உருவாகிறது.
சரியான செரிமானம் ஆகாத நிலையில் தன் பாதுகாப்புத்தன்மையால் பாதைகளை அடைக்கிறது. திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தை தடுக்கிறது. திசுக்கள் உண்டாவதை தடுக்கிறது.
மெதுவாக இந்த ஆமம் தோஷங்களுடன் சேர்ந்து சாமதோஷம் என்ற நிலையை அடைகிறது. சாம வாதம், சாமபித்தம், சாமகபம் என்ற இம்மூன்று நிலைகளும் வேறுவேறு விதமான ஆர்த்தரைட்டிஸ் உருவாக காரணமாகின்றன.
பலம் குறைந்த தாதுக்கள்
தாதுக்கள் பலம் குறையும் போது தோஷங்கள் நிலைமாறும் சூழ்நிலை உருவாகி ஆர்த்தரைட்டிஸ் வர ஏதுவாகிறது. பொதுவாக எலும்புகள் தசைகள் கொழுப்புத்திசுக்கள் ஆகிய ன தோஷங்களின் நிலைப்பாடு மாறுவதால் பாதிக்கப்பட்டு ஆர்த்தரைட்டிஸ் உண்டாகிறது.
நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறனே நேர் எதிராக மாறி ஆட்டோ இமயூன்நோய்களாகின்றன (வெளிக்காரணங்கள் இல்லாமல்) என்ற, இன்றைய, நவீன மருத்துவக்கூற்று இந்நிலைக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.
மனம்
அடுத்த முக்கியமான காரணி மனம், உடல், இரண்டும் ஒருங்கிணைந்ததே மனித வாழ்வு நோயாளிகள் பல விதமான கவலைகள், துயரம், மனஉளைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் போது செரிமானம் தடைப்படும். ஆமம் உண்டாகும் தூக்கமின்மை வரும், அதனால் வாதம் அதிகம் ஆகும். கோபத்தால் பித்தம் அதிகம் ஆகும் அல்சர் போன்றவை வரும். துயரம் தொடரும் போது பித்தம் அதிகமாகும், மூட்டுக்களைப் பாதிக்கும்.
ஆகவே சிகிச்சை முறை உடலைக் குணப்படுத்துவது மட்டுமில்லாமல் மனதைச் சரிசெய்வதிலிருந்து தொடங்கவேண்டும்.