புதியவைமருத்துவம்

கோடையில் கண்களைக் காத்திட…

கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்…

நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானவை கண்கள். எனவே கண்களை கவனத்தோடு பாதுகாத்திட வேண்டும். அதிலும் கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்…

நாம் நமது உடைகள், உணவுப் பழக்கங்கள் என நம் வாழ்க்கை முறையை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கிறோம். காரணம், பருவமாற்றங்கள் நம் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உதாரணமாக, அதிக வெப்பத்தால் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகம் உறிஞ்சப்படுகிறது. இதனால் கண்களில் வறட்சித்தன்மையும் எரிச்சலும் ஏற்படுகின்றன.

மேலும் நாம் வெயிலுக்குப் பயந்துகொண்டு அதிக நேரத்தை குளிர்சாதனத்தின் செயற்கைக் குளிரில் கழிக்கலாம். அப்போது குளிர்ச்சியான காற்று நேரடியாக நம் கண்களில் படும்பொழுது கண்களில் வறட்சியும் எரிச்சலும் ஏற்படலாம். மேலும் கோடைகாலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வைரஸ் தொற்று மற்றும் வீக்கம், கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்களில் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

சரி, இப்பாதிப்புகளை எப்படித் தவிர்க்கலாம்?

அதிக அளவு நீர் பருக வேண்டும், கண்ணுக்கு குளிர்ச்சியான கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும், குளிர்சாதனக் காற்று கண்களில் நேரடியாக படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், கண்களுக்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ளவும், அடிக்கடி கண்களை நீரால் கழுவவும் வேண்டும்.

கண் இமைகளை மூடி வெள்ளரித்துண்டுகளை வைக்கலாம், போதுமான அளவு தூங்கி ஓய்வெடுக்கலாம்.

கண்களில் ஏற்படும் மற்ற பார்வைக் குறைபாடுகளுக்கும், கண்நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும், உரிய கண் மருத்துவரின் ஆலோசனையை நாடுவதே நல்லது. நாமாக மருந்துகளை முடிவு செய்து பயன் படுத்துவது, வேறு பக்க விளைவுகளையோ அல்லது பாதிப்புகளையோ ஏற்படுத்தக் கூடும்.

எனவே கவனமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்து, கண்களைக் காத்துக்கொள்வோம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker