புதியவைமருத்துவம்

இருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்

இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகளுக்கு எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம்.

பருவநிலை மாற்றத்தால் இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். அதிலிருந்து எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம்

மூலிகை தேநீர்:

இஞ்சி, லவங்க பட்டை, லெமன் கிராஸ் மூன்றையும் சிறிதளவு சேர்த்து 1 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து தேநீருக்கு மாற்றாக பருகி வரலாம்.

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள இது உதவும்.

சுடு தண்ணீர்:

குடிப்பதற்கு சுடு தண்ணீரை பயன்படுத்தினால் உடல் உபாதைகள் குறையும்.

பால் பொருட்களை தவிர்க்கவும்:

சளி, இருமல் தொல்லையால் அவதிப்படும் சமயங்களில் பால், பாலாடைக் கட்டி, தயிர் மற்ற பால் பொருட்கள் மற்றும் குளிர்பானம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

மூக்கடைப்பு:

சிறிதளவு இஞ்சி அல்லது யூக்கலிப்டஸ் இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதன் நீராவியை நுகர்ந்துவந்தால் மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம்.

ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையுடன் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தினமும் மூன்று முறை உட்கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன் அரை தேக்கரண்டி லவங்கப்பட்டை கலந்தும் சாப்பிடலாம். இது சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். டாக்டரின் பரிந்துரையுடன் வைட்டமின்-சி மாத்திரையும் சாப்பிட்டு வரலாம்.

வறண்ட இருமல்

துளசி தூள் அல்லது 5-6 துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தேநீர் தயாரித்து பருகலாம். இந்த தேநீர் வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கக் கூடியது. நாட்டு சர்க்கரையுடன் ஓமம் கலந்தும் மென்று வரலாம்.

குழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் அரை கப் மாதுளைச் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு, திப்பிலி தூள் கலந்து கொடுக்கலாம். தொடர் இருமலால் அவதிப்படுபவர்கள் பூண்டு, திரிகடுகம் சூரணத்துடன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சளி, இருமலுக்கு பூண்டு சிறந்த மருந்து. அரை தேக்கரண்டி சுக்குத் தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வருவது தொண்டைக்கு இதமளிக்கும்.

வெந்நீருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை, தேன் கலந்து பருகினால் சளித்தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker