சமையல் குறிப்புகள்புதியவை
வெயிலுக்கு அருமையான வெள்ளரிக்காய் தயிர் சாலட்
கோடை வெயிலுக்கு வெள்ளரிக்காய் தயிர் சாலட் செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளுகுளு என்று இருக்கும். இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 100கிராம்
கேரட் துருவியது – 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கெட்டி தயிர் – 1 கப்
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரை நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான வெள்ளரிக்காய் தயிர் சாலட் ரெடி.