சீரற்ற மாதவிடாய் காரணமும் – தீர்வும்
ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருப்பதால், அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம்.
நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். ஆனால், கடைகளில் விற்கும் நெல்லிக்காய் கேண்டியை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.
வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும்.
மாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை இணைத்து, சாப்பிடலாம்.
சிலருக்கு பீரியட்ஸ் மூன்று-நான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாள்களுக்கு மேல் கூட அதிக ஃப்ளோ இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.
ஆனால், சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சனையை சரி செய்யும்.
அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ஃப்ளோ இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.