தாய்மை-குழந்தை பராமரிப்பு

பிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா?

குழந்தைகளைக் குளிப்பாட்ட பெரியவர்களைத் தேடுவது, வயதான பாட்டிகளைத் தேடுவது எனப் பெரிய சவாலே நடக்கும். குழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. எப்படி எனத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வேலை சுலபமாகி விடும்.



* குழந்தையைத் தினமும் குளிப்பாட்டுவது நல்லது.

* வயிற்றில் இருக்கும்போது நீரில் இருந்த குழந்தை கொஞ்சம் பூசினாற் போலத் தெரியும். ஆனால், பிரசவத்துக்கு பின் உடல் வற்றும்.
* எடை குறைவதுடன் சருமத்தில் உள்ள தோல் உரிந்து வறண்டு போகும்.
* சருமம் அழகாக மாற, குழந்தையை ஆரோக்கியமாக இருக்க தினமும் குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டும்.
* எண்ணெயும் தண்ணீரும் குழந்தைக்கு மிகவும் தேவை. ஆதலால் குளியலும் எண்ணெய் குளியலும் குழந்தைக்கு மிக அவசியம்.
* மிகவும் குளிர்ந்த இடத்தில், குளிர் பிரதேசங்களில் இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழந்தையைக் குளிக்க வைக்கலாம்.

குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி?

* எண்ணெயை இளஞ்சூடாக சூடுப்படுத்திக் கொள்ளவும்.
* முதலில் குழந்தைக்கு தேவையானவற்றை எண்ணெய், சோப், பேபி ஷாம்பு, துண்டு, நீங்கள் உட்கார மனை போன்ற நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்களோ அதையெல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு பக்கெட்டில் வெந்நீர், இன்னொரு பக்கெட்டில் இளஞ்சூடான தண்ணீர்; உங்களின் கை சூடு பொறுக்கும் அளவு.
* எல்லாப் பொருட்களும் கை எட்டும் தூரத்தில் சீராக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
* இப்போது கால்களை நீட்டிக் கொள்ள வேண்டும். குழந்தையை நிமிர்த்தி கால்களில் விட்டுக் கொள்ள வேண்டும். குழந்தையின் தலையை கிளிப் மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
* குழந்தையின் முகம், மார்பு பகுதி, வயிறு, கால்கள் ஆகிய இடங்களில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
* மெதுவாக குழந்தையின் தலையை நிமிர்த்தி கழுத்தில் எண்ணெயைத் தடவ வேண்டும்.
* குழந்தையின் உடலிலும் எண்ணெய், உங்கள் கைகளிலும் எண்ணெய் என்பதால் குழந்தையை மிக கவனமாக எடுத்து கால்களின் மேல் கவிழ்த்து படுக்க வைத்துக் கொள்ளுங்கள்.
* முன்பு போலவே, கால்களால் குழந்தையின் தலையை கிளிப் போல பிடித்துக் கொள்ள வேண்டும்.
* குழந்தையின் தலை, பின் கழுத்து, முதுகு, பின்னங்கால்கள் ஆகியவற்றில் எண்ணெய்த் தடவ வேண்டும்.
* எண்ணெய் தடவும்போதே மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.
* குழந்தை கவிழ்ந்து படுத்தபடி இருக்கும்போதே, குழந்தையின் தலையில் இளஞ்சூடான நீரை ஊற்ற வேண்டும்.
* குழந்தை கவிழ்ந்து இருப்பதால் முகத்தில் நீர் விழாது. எனினும் கவனமாக நீர் ஊற்ற வேண்டும்.
* இப்போது பேபி ஷாம்பு போட்டு முடியை அலசலாம். உடம்புக்கு பேபி சோப் போடலாம். தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளுங்கள்.
* குழந்தையை திருப்பி, முகம், கை, கால்கள், உடம்புக்கு சோப் போட்டு அலசி விடுங்கள்.
* கண்களில் சோப், ஷாம்பு, தண்ணீர் போகாமல் கவனமாக குழந்தையை கையாள வேண்டும்.
* தொடை இடுக்கு, கை இடுக்கு, அக்குள் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்துவது நல்லது.
* குளிக்க வைத்தப் பின் குழந்தையை துண்டால் நன்றாகத் துடைத்து விடுங்கள்.
* கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் நன்றாகத் துடைக்க வேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker