சமையல் குறிப்புகள்புதியவை
கொளுத்தும் வெயிலுக்கு வெள்ளரிக்காய் தயிர் ஜூஸ்
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் தயிர் ஜூஸை காலையில் குடித்து வந்தால், நாள் முழுவதும் உடலானது மிகவும் எனர்ஜியுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 50 கிராம்,
தயிர் – 100 மி.லி.,
உப்பு – தேவையான அளவு,
மிளகுத்தூள் – 1 சிட்டிகை,
புதினா இலை – 10 (நறுக்கவும்).
செய்முறை :
வெள்ளரிக்காயை தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்சியில் தயிர், உப்பு, நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அரைத்து கொள்ளவும்.
அரைத்த ஜூஸில் மிளகுத்தூள், புதினா இலையை கலந்து பருகவும்.
சூப்பரான வெள்ளரிக்காய் தயிர் ஜூஸ் ரெடி.