உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்
நல்ல சத்துள்ள உணவு, நல்ல தூக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியனவற்றால் நம் உடல் வலுப்பெறும். “உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்” என்பதைக் கடைபிடிக்க வேண்டும்.
அக்னியைச் சீராக வைப்பது, இதய நலத்துக்கு மிகவும் அவசியம். சுத்திகரிக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, முழுமையான உணவுகளை, சரியான உணவுக் கலப்பில், சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் சாப்பிடும்போது முழு கவனமும் உணவின் மீது இருந்தால், அக்னி பலப்படும், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது நன்று, அமைதியான சூழலில், மன அமைதியுடன் உணவு உண்ண வேண்டும், கலந்துரையாடல், தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது ஆகியவற்றை உணவு உண்ணும் போது தவிர்க்க வேண்டும்.
‘அக்னி’ உணவைச் செரிமானம் செய்து, சக்தியாக மாற்றுவதையும் உடலின் ஒவ்வொரு திசுவுக்கும் கொண்டு செல்லப்படுவதையும் மனக்கண்ணால் பார்க்க வேண்டும். ‘இதுவரை சாப்பிட்டது போதும், உணவு திருப்தியாக இருந்தது’ என்பன போன்று உள்ளிருந்து வரும் சமிக்ஞைகளைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.
சாப்பிட்டு முடிந்ததும், ஆழ்ந்த மூச்சு எடுத்து அடுத்த வேலைக்குப் போக வேண்டும். அதிகம் உண்பது தவிர்க்கப்பட வேண்டும், அக்னி, மதிய வேளையில் மிகுந்த உச்சத்தில் இருக்கும்போது மதிய உணவை உண்ண வேண்டும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும், அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகளைத் தவிர்க்க வேண்டும், கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். அவ்வாறு சாப்பிட நேரும்போது காய்கறிகள் பிற சத்துக்கள் மிகுந்த பொருட்களுடன் கலந்து கொள்ளலாம்.
அதிக உப்பு, அதிக சர்க்கரை தவிர்க்கப்பட வேண்டும். கொழுப்புச் சத்தை முழுவதும் தவிர்க்க கூடாது. நன்மை தரும் கொழுப்புச் சத்து உள்ள தாவரம் சார்ந்த உணவுகளை உண்டு கெடுதல் தரும் கொழுப்புச் சத்துக்களைக் குறைத்து, இதயத்துக்கு நலம்தரும் உணவா என்று பார்த்து உண்பது நல்லது.
“உண்பதற்காக வாழாமல், வாழ்வதற்காக உண்ண வேண்டும்” என்பதைக் கடைபிடிக்க வேண்டும்.
புகை, மது:
புகையிலையில் உள்ள டொபேக்கோ என்னும் நச்சுப்பொருள் இதய நோய்க்குக் காரணமாகிறது. ரத்தத் குழாய்களைச் சுருங்கச் செய்து விடுகிறது. சிகரெட்டில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு, ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜனுக்கு மாற்றாக ரத்தத்தில் கலக்கிறது. அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத்துடிப்பு அதிகமாகிறது. உடல் முழுவதற்கும் தேவையான ஆக்ஸிஜனை அனுப்ப, இதயம் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. புகை பிடிக்கும் பெண்கள், கருவுறாமலிருக்க மருந்துகள் சாப்பிடும் பெண்கள் ஆகியோருக்கு இதய நோயும், ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் நோயும் வரும் வாய்ப்பு அதிகம்.
புகைப்பழகத்தினை விடுபவர்களுக்கு இதய நோய் வருவதும் குறைகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஸ்தூல உடலிலும் சரி, சூட்சும உடலிலும் சரி, இரண்டிலும் இதயம் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. உண்மையான உடல் ஆரோக்கியம் இருக்கும் பட்சத்தில், திசுக்களிலிருந்து எல்லா உறுப்புக்களும் ஆரோக்கியமாக திகழும். அதற்கு ஆரோக்கியமான உணவு, சரியான அளவில் ‘அக்னி’, சரியான வாழ்க்கை முறை, நன்கு சீராக இயங்கும் நரம்பு மண்டலம் மற்றும் சரியான மனநலம், ஆன்மநலம் ஆகியன தேவை.
நல்ல சத்துள்ள உணவு, நல்ல தூக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியனவற்றால் நம் உடல் வலுப்பெறும். உறவுமுறைகளைச் சரியாகக் காத்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல், உண்மையான மகிழ்ச்சியை அனுபவித்தல், நமது உள்மனதுடன் உண்மையாக இணைந்திருந்தல் ஆகியன இன்னும் நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நம்மை நாமே மதித்து வாழ்வது மிக முக்கியமானது. புற உலகின் வெற்றிக்காக, நமது சொந்த விருப்பு, வெறுப்புகளைப் புறந்தள்ளாமல், மனம் சார்ந்த உணர்வுகளுக்குப் போதிய வடிகால் ஏற்படுத்தி, அறிவாலான உலகை மட்டுமே காணாமல், நம்மைத் தாங்கும் இந்தப்பூவுலகம், எந்த விருப்பு, வெறுப்புமின்றி, ஈன்று புறந்தரும் தாயைப் போன்று தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்தப் பிரபஞ்சம், இன்றுவரை நம் கைபிடித்து நடக்கும் உறவுகள், நன்மை, தீமை எல்லாவற்றையும் அறிந்து வாழவைக்கும் சமூகம், ஓரடி நாம் முன்வைத்தால், பல அடி இயங்கி வந்து நம்மைச் சீராட்டும்.
இறை/ இயற்கை என இம்மனித வாழ்வில் எத்தனை எத்தனை பாதைகள், பயணங்கள், எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!” என்று சுகமும், புறமும் ஒன்றி வாழ்ந்தால் நோயே கிடையாது! (பொறாமை, எதிர்மறை எண்ணங்கள் தவிர்த்து, பொதுநலத்துடன் வாழ்ந்தால் நோய்க்கு இடமில்லை என்றே கூறுகிறது! 7 ஆண்டுகள் தகுந்த சிகிச்சை முறையை மேற்கொண்டால் உடலின் அடிப்படையான ஜீன்னை கூட மாற்றிவிடலாம்.