முளைகட்டிய கொள்ளு வடை செய்வது எப்படி
கொள்ளுவில் துவையல், சட்னி, சுண்டல், குழம்பு செய்து இருப்பீங்க. இன்று கொள்ளுவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முளைகட்டிய கொள்ளு பருப்பு – 1 கப்,
வெங்காயம் – 4,
பச்சை மிளகாய் – 2, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு,
பெருங்காயத்தூள், சமையல் சோடா – தலா 1 சிட்டிகை,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முளைகட்டிய கொள்ளுவை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிரைந்து கொள்ளவும்.
பிரைந்த மாவை சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த வடைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.
சூப்பரான கொள்ளு வடை ரெடி.