புதியவைமருத்துவம்

குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போவதற்கான காரணங்கள்

குழந்தை பிறப்புக்கு பின், குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்து, குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் கடமையாகும். இந்தப்பணியை சிறப்பாய் செய்ய, தாய்ப்பால் அதிகரிக்கும் உணவுகளை தாய்மார்கள் உண்ண வேண்டும். அதோடு குழந்தைக்கு தாய்ப்பாலின் சுவை பிடித்திருக்கிறதா, குழந்தை நன்கு பால் குடிக்கிறதா என்பதை தாய் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் சுவையை வெறுக்க வைக்கும் தாயின் சில செயல்கள், தாய் மேற்கொள்ளும் சில பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது உண்ண வேண்டும்; குறைந்தது 8 டம்ளர் அளவு திரவ உணவு பருகியிருக்க வேண்டும்; பால், ஜுஸ், சூப் போன்றவை இதில் அடங்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கால்ஷியம் சத்து நிறைந்த உணவு, பால், பால் சார்ந்த உணவு, பச்சை காய்கறிகள், கீரை, மீன் போன்றவை சிறந்தது.

ஒவ்வொரு முறையும் பால் புகட்டும் போதும், குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தால், அதற்கு தாய்பாலில் சுவை மாறுபாடு உள்ளது என்று பொருள். சில நேரத்தில் தாய்ப்பாலின் சுவையில் மாறுபாடு ஏற்படும்; குறிப்பிட்ட காய்கறிகள், மனஅழுத்தம், சுற்றுச்சூழல் மாசு போன்றவை காரணமாக தாய்ப்பாலின் சுவை மாறலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தையால் சுவையை உணர முடியாது என்று பலர் நினைக்கலாம்; ஆனால், உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, அவர்களுக்கு தாய் சாப்பிடும் உணவு பற்றியும், தாயின் செயல்கள், தாய்  உணவின் சுவைகள் குறித்தும் குழந்தை அறிந்தே இருக்கும். தாய் உண்ட உணவுகளில் சில உணவுகள் குழந்தைக்கு பிடித்தும் பிடிக்காமலும் போயிருக்கலாம். இந்நிலையில், குழந்தைக்கு தாய்பால் பிடிக்காத சூழ்நிலை ஏற்படும் போது, தாய்மார்கள் கவலைப்படாது, அதை எப்படி சரி செய்வது என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும்..!

குறைந்த தாய்ப்பால் சுரப்பு, மனச்சோர்வு, மார்பக முலை சிறிதாக இருப்பது, தாய்ப்பாலின் சுவை மாறுபடுவது போன்ற காரணத்தால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம்.

தற்காலத்தில் பெண்கள் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இந்த பழக்கங்களை கடைபிடித்தால், அது குழந்தைக்கு தாய்ப்பாலின் சுவையை பிடிக்காமல் செய்து, பாலை வெறுக்கச் செய்துவிடும். மேலும் இப்பழக்கங்களால் குழந்தைகளின் உடல் நிலையும் கட்டாயம் கெட்டுப்போகும் அபாயம் உண்டு.

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் காரம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டு, தாய்ப்பால் கொடுத்தாலும் அது குழந்தையை தாய்ப்பாலின் சுவையை வெறுக்கச் செய்யும்.

தாய் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளாலும் தாய்ப்பாலின் சுவை மாறுபட்டு, குழந்தை அதை வெறுக்க நேரிடலாம். இதற்கு மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது சிறந்தது.

கடல் உணவுகள், இறைச்சி, அதிக கொழுப்பு உள்ள உணவுகள் போன்றவை தாய்ப்பாலின் சுவையை மாற்றலாம். மேலும் மீன், ஆட்டின் குடல், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, மேலும் பல இறைச்சியின் மனம் மற்றும் சுவை தாய்ப்பாலின் சுவையை மாற்றலாம். ஆகையால் தாய்மார்கள் இவ்வகை உணவுகளை, தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் தவிர்த்து நல்லது.

மேலும் காய்கறி, பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளும் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்கள் கலக்காததாக இருக்கும் வகையில் பார்த்து வாங்கி, சமைத்து உண்ணவும்.

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிக அளவு பூண்டு சேர்த்துக் கொண்டால், இதனால் தாய்ப்பாலின் சுவை மாறி, குழந்தை பால் குடிக்காமல் இருக்கும் நிலை ஏற்படலாம்..!

தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும் போது, ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு தாய்பால் புளிக்கும்; இது தாய்ப்பாலின் சுவையை மாறுபடுத்தி, குழந்தையை பாலை வெறுக்கச் செய்துவிடும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker