சமையல் குறிப்புகள்புதியவை

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு – வேர்க்கடலை கூழ்

கோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கேழ்வரகு கூழ் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தரும். இன்று இந்த கூழ் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்,
வேர்க்கடலை – 1 கைப்பிடி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

கேழ்வரகு மாவை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதி வந்ததும் கேழ்வரகு கலவை, வேர்க்கடலை, உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும்.

வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான கேழ்வரகு – வேர்க்கடலை கூழ் ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker