சூப்பரான கோதுமை ரவை பருப்பு சாதம்
சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை, காய்கறிகள் சேர்த்து பருப்பு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை (பெரியது) – 1 கப்,
கடலை பருப்பு – அரை கப்,
வாழைக்காய் -1,
கத்திரிக்காய் – 2,
பீன்ஸ் – 10,
பெரிய வெங்காயம் – 1,
கேரட் – 1,
ப.பட்டாணி – கால் கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி,
கடுகு – கால் தேக்கரண்டி,
வெந்தயம் – 1 தேக்கரண்டி,
எண்ணெய் – 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிது,
கொத்தமல்லி இலை – 1 சிறிதளவு,
புளித் தண்ணீர் – சிறிது.
செய்முறை :
கோதுமை ரவையுடன் 2 கப் தண்ணீரும், பருப்புடன் 1 கப் நீரும் சேர்த்து குக்கரில் தனித்தனியே வேகவிடவும்.
காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியபின் கத்திரிக்காய், வாழைக்காய் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் புளித்தண்ணீர் சேர்த்து, மேலும் சில நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் வேகவைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், சாம்பார்த் தூள் சேர்த்து கலக்கவும்.
5 நிமிடம் வேகவிட்டு, ஏற்கனவே வேகவைத்த கோதுமை ரவை, பருப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சூப்பரான கோதுமை ரவை பருப்பு சாதம் ரெடி.