புதியவைமருத்துவம்

தீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்

* ஒரு மேசைக்கரண்டி சின்னச் சீரகத்தை நன்றாக அவித்து பின் ஒரு மேசைக்கரண்டி பனங் கல்லக்காரத்துடன் சேர்த்து ஒரு நாளுக்கு இரு தடவை குடிக்கவும். நெஞ்சில் உள்ள சளி நன்றாக பழுத்து வெளியே வந்துவிடும்.

* ஒரு கரண்டி தேங்காய் எண்ணையை நெருப்பில் சூடாக்கி அதனுடன் கொஞ்சம் கற்பூரத்தை பொடிசெய்து கலந்து நெஞ்சிலும் முதுகிலுள்ள விலாப்பகுதியிலும் மற்றும் உள்ளங்கால்களிலும் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். நாலு வெற்றிலையை நெருப்பில் வாட்டி அதன் மீது நீங்கள் தயாரித்த கற்பூரம் + தேங்காய் எண்ணெய் தைலத்தையும் தடவி நெஞ்சின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் போட்டுக்கொண்டு இரவு தூங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.

* சின்ன வெங்காயத்தை நன்றாக வெட்டி பனம் கல்லக்காரத்துடன் கலந்து ஊறவிட்டு மறுநாள் அதனை நன்றாக மென்று சாப்பிட்டுப் பாருங்கள். வரட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

* Oregano Oil ஒரு கரண்டி எடுத்து நன்றாக அண்ணாந்துகொண்டு அடித்தொண்டையில் விட்டு விழுங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.

* குத்தரிசியை மூட்டைகட்டி தலையணைக்குப் பதிலாக வைத்துக்கொண்டு இருவு உறங்கிப் பாருங்கள் தலையில் பிடித்திருந்த நீர் எல்லாம் சீக்கிரம் இறங்கிவிடும்Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker