உறவுகள்புதியவை

தாழ்வு மனப்பான்மையைத் தரும் சுய இன்பத்தை நிறுத்தும் வழிகள்

மன அழுத்தம் மற்றும் பாலியல் டென்ஷன்களை நீக்க சுய இன்பம் காண்பது உதவுவதால், அது உடல் நலத்திற்கு நல்லது என பலரும் கூறுகின்றனர். ஆனால் சுய இன்பம் காண்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் என்பதே உண்மையாகும். இதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் பல வலிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆய்வுகளின் படி, ஒரு வாரத்துக்கு 3 முதல் 7 தடவை வரை சுய இன்பம் காணலாம். ஆனால் இந்த கணக்கு அதிகரிக்கையில் தான் நீங்கள் அதற்கு அடிமையாகி விடுகிறீர்கள்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கையில் ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புகளில் புண்களும் வீக்கமும் ஏற்படும். பல சூழ்நிலையில், அடிமையானது கட்டுக்கடங்காமல் போய் விட்டால், ஆண்களுக்கு விந்தணு சுரப்பது கடினமாகி விடும். அதற்கு காரணம் சீரான முறையில் சுய இன்பம் காண்கையில் விந்தணு எண்ணிக்கை குறையத் தொடங்கி விடும்.

தனிமையை தவிர்க்கவும்
தனிமையை தவிர்க்கவும். சுய இன்பம் காண்பதை நிறுத்துவதற்கான எளிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் தனியாக இருக்கையில், பொழுதை கழிக்க இதில் எல்லாம் தான் கவனம் செல்லும்.

சீக்கிரமாக தூங்குதல்
அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதை நிறுத்த மற்றொரு வழி – சீக்கிரமாக தூங்குவது. ஆராய்ச்சிகளின் படி, நேரம் கழித்து தூங்கச் செல்பவர்களுக்கு நீல படம் பார்ப்பதிலும் காம புத்தகங்கள் படிப்பதிலும் ஈடுபாடு செல்லுமாம். இதனால் சுய இன்பம் காண்பது அதிகரிக்கும் தானே.

ஆன்மிகம் உதவும்
ஆன்மிகத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் அமைதி பெறும். அதனால் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு இந்த தீய பழக்கத்தை கைவிட முயற்சி செய்யுங்கள்.

கைகளை சுறுசுறுப்பாக வைத்திடுங்கள்
கைகளை பிறப்புறுப்பு பகுதிக்கு கொண்டு போகாமால், எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும். அந்த உணர்வு வந்துவிட்டால், உடனே கைகளை கொண்டு சுத்தப்படுத்துதல், தோட்ட வேலை அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற வேளைகளில் ஈடுபடுங்கள்.

அந்த பொம்மைகளை தூக்கி எறியுங்கள்
சுய இன்பம் காணும் பழக்கத்தை விடுவதில் நீங்கள் உறுதியாக இருந்தால், அந்த உணர்வை தூண்டும் பொம்மைகளை முதலில் தூக்கி எறியுங்கள். சில விலையுயர்ந்த பொம்மைகளை தூக்கி எறிய மனசு வராது தான். ஆனால் அது உங்கள் உடல் நலத்துக்கு நல்லதாச்சே.

குளிப்பது அந்த உணர்வை தூண்டுகிறதா?
குளியல் தொட்டி அல்லது ஷவரில் குளிக்கும் போது அந்த உணர்வை தூண்டுகிறதா? அப்படியானால் குளியலறையில் நீண்ட நேரம் செலவிடாதீர்கள்.

உணவு பழக்கத்தில் மாற்றம்
சுய இன்பம் காணும் பழக்கத்தை கை விட உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவதும் கூட எளிய வழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்ற நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபட, அதற்கு தேவையான ஆற்றல்களை பெறுவதற்கு அதற்கான உணவுகளை உண்ணுங்கள்.

தியானம்
தியானம் என்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. தியானத்தில் ஈடுபடும் போது, சுய இன்பம் அனுபவிப்பதை மறந்து பிற விஷயங்களை பற்றி சிந்திக்க, மனதும் உடலும் ஒத்துழைக்கும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker