சமையல் குறிப்புகள்புதியவை
சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
கூனி இறால் (Baby Prawns / Kooni) – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 6 பல்
ப.மிளகாய் – 2
வெங்காயம் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும்.
சூப்பரான கூனி இறால் ரெடி.