சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி – 3/4 கப்
பச்சை பருப்பு – 1/4 கப்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கேரட் துண்டுகள் – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
புதினா – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 4 பற்கள்
மஞ்சத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பால் ( அ ) தேங்காய் பால் – 1/2 கப்
செய்முறை :
கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
விசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
கடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
சூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.