காரசாரமான சிக்கன் மிளகு வறுவல்
சிலர் காரசாரமாக சாப்பிட விரும்புவார்கள். இன்று சிக்கனில், மிளகு சேர்த்து காரசாரமான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
சிக்கன் – அரை கிலோ
மிளகு – 1 ஸ்பூன்
மிளகுத் தூள் – 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 2
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.
கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு, 2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளிந்து கடாயை மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
காரசாரமான சிக்கன் மிளகு வறுவல் ரெடி.