பிரசவம் முடிந்த சில நாள்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக்கொள்வது நல்லதா? அப்படி நல்லதில்லை என்றால் எப்போது உறவை வைத்துக்கொள்ளலாம்?
சிசேரியன் செய்யவில்லை. ஆயுதம் போடவில்லை. பெரிய ஆபரேஷன் பண்ணவில்லை. சுகப்பிரசவம்தான் என்றால் எப்போது வேண்டுமானாலும் உடற்சேர்க்கை புரியலாம்.
ஆனால் சுகப்பிரசவத்துக்குப் பிறகு ஜனனக் குழாய், பிள்ளையைப் பெற்றெடுக்க பெரிதாய் விரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதால் சில மாதங்கள் ஜனனக் குழாய்க்கு விடுப்பு கொடுப்பது நல்லது.