கர்ப்ப காலத்தில் கைகளில் உணர்வு குறைந்து காணப்படுவது ஏன்?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன, இதற்கான தீர்வு என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கைகளில் உணர்வு என்பது குறைந்து காணப்படுகிறது. இதை தான் மணிக்கட்டு குகை நோய் என அழைக்கப்படுகிறது. இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக அமைய, இதற்கு காரணம் திரவம் சுரப்பதாலே. இந்த வீக்கம் நரம்பை பாதிக்க, இதனால் உணர்ச்சி என்பது அற்று உங்கள் கைகள் காணப்படுகிறது. இதனால் உங்கள் கைகள் அசைப்பதற்கு கடினமான நிலையுடன் காணப்படுகிறது.
இந்த பிரச்சனை என்பது கர்ப்ப காலத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் தொடங்குகிறது. இதனால் உங்கள் கைகள் முழுவதும் வலி இருக்க, காலை சுகவீனத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் இரவில் உங்கள் கைகள் புரண்டு காணப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் நீங்கள் அதிக எடையை கொண்டு காணப்பட்டால், இந்த பிரச்சனை என்பது அதிகமாக காணப்பட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், ஒரு சில அறிகுறிகளாக இந்த பிரச்சனை என்பது அமைகிறது.
அது என்னவென்றால்,
1. ஒன்றுக்கு மேல் குழந்தை பிறக்க வாய்ப்பிருந்தால் இப்பிரச்சனை என்பது இருக்கும்.
2. கர்ப்ப காலத்துக்கு முன்னரே நீங்கள் கனத்த உடம்புடன் இருந்தால் இந்த பிரச்சனை என்பது இருக்கும்.
3. கர்ப்ப காலத்தில் உங்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும்.
இந்த கைகள் நரம்பு சுருக்க பிரச்சனை என்பது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதில்லை. அதனால், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் வெளியில் வந்துவிடலாம்.
உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து கொள்வது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து பங்கு காய்கறி மற்றும் பழம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
வைட்டமின் பி6 நரம்பு பிரச்சனையை போக்கும். மேலும்,
1. சூரிய காந்தி மற்றும் எள் விதை
2. ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள்
3. பூண்டு
4. மெல்லிய இறைச்சி துண்டு
5. வெண்ணெய் பழம்
6. எண்ணெய் கொழுப்பு கொண்ட மீன் (சால்மன், காட் போன்ற மீன்கள்)
நீங்கள் வைட்டமின் பி எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரின் ஆலோசனை என்பது மிகவும் அவசியம்.