புதியவைமருத்துவம்

இதயநோயை கட்டுபடுத்தும் முறைகள்

நெஞ்சுக்கூட்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் விதமே, இதயத்தின் முக்கியத்துவத்தை காட்டும். இதயநோயை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி பார்க்கலாம்.

கீழ்த்திசை மருத்துவ சிந்தாந்தப்படி, உள்ளுணர்வின் ஆன்மாவின் இருப்பிடம் மூளை அல்ல! இதயமே!! நெஞ்சுக்கூட்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் விதமே, இதயத்தின் முக்கியத்துவத்தை காட்டும்.

ஒரு மனிதன் தனது இதயத்தில் என்ன நினைக்கிறானோ, அதுவே அவனது சொரூபம், இயல்பு நிலை என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. நமது உபநிஷத்துக்களும் நாம் நமது மனதில் கொண்டுள்ள உணர்வுகளும், எண்ணங்களுமே உண்மையில் நாம் யார் என்பதைக் காட்டும் அளவுகோல்! என்று கூறுகின்றன.

மூளையால் நாம் சிந்திப்பது நமக்கு அவ்வப்போது தோன்றும் மேலோட்டமான படிவங்களே.

இதயநோய்கள்

மனிதன் ஆழத்தில் இருக்கும் நமது சுயம் சார்ந்த பதிவுகள், உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே உள்ளன.  புறஉலகில் லோகாயத வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் கூட மனதில் நொந்து சிதைந்து போய் இருக்கிறார்கள். சாதனைகளை எட்ட, வெற்றி பெற இதயத்தைப் புறக்கணித்தால் அது தோற்றுவிடுகிறது.

நமது கலாச்சாரம் இதயத்தை ஆன்ம முன்னேற்றத்திற்கான தளமாக கொள்கிறது. தனி மனிதனது உணர்வுகள், சமுதாயம் சார்ந்த நிலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு தகுந்த இடம் தரவில்லை என்றே சொல்லலாம்.

வேதத்தின் அங்கங்களான ஆயுர்வேதம், யோகா, நன்மைக்கான தந்திரம் ஆகியவை இதயத்தை மாறுபட்ட, வேறுபட்ட சக்திப்பாதைகள், நாடிகள், மற்றும் பிற உடலியல் பாதைகள் ஆகியன சந்திக்கும், கடந்து போகும், ஊடறுக்கும் சக்திப்பூர்வமான வலைப்பின்னலாகச் சொல்கின்றன.

ஒரு வண்டி சக்கரத்தின் மையம் போல இதயமும் சுற்றியிருக்கும் கம்பிகளைப்போல வேறுவேறு பாதைகளும் உறுப்புக்களும் இருக்கின்றன. சக்திப்பாதைகள் இதயத்திலேயே இருக்கலாம். அங்கிருந்து தொடங்கலாம். அல்லது அவ்வழியே பயணிக்கலாம். ஆகவே இதயம் இவற்றை பாதிக்கலாம் அல்லது இவை இதயத்தை பாதிக்கலாம். இவ்வாறு இப்பாதைகளின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

உடலானது தோல் முதல் எலும்பு, மஜ்ஜை வரையிலான பாகங்களால் ஆன உருவம் ஆக இருந்தாலும் அது சூட்சுமான ஸ்தூலமான சக்திகளின் தொகுப்பே ஆகும்! உடலின் உடல் சார்ந்த மனம் சார்ந்த எல்லா இயக்கங்களையும் நிர்வகிக்கும் கட்டுப்படுத்தும் திறன் இச்சக்திகளுக்கே உள்ளது. இவை சில சக்தி மையங்கள் அதாவது சக்கரங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதயம் உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் போஷாக்கைக்கொண்டு சேர்க்கிறது என்பதற்காகப் பால் சூட்சும உடலில் அதன் பங்களிப்பை அறிந்தால் மட்டுமே இதயத்தைப்பற்றி முழுமையாக அறிய முடியும்.

உடல், இதயம், சக்கரங்களின் இயக்கம், செயல்பாடுகள் ஆகியன கீழ்கண்டவாறு விளக்கப்படுகிறது.

மனித உடலுக்கு 72000 நுண்ணிய நரம்பு களைக் கொண்ட நரம்பு மண்டலம் (மூளையிலிருந்து, முதுகுத்தண்டு முடிய) சக்தியை தரும் தொழிற் கூடமாக திகழ்கிறது. இதன் முக்கிய இயக்குவிசைகள் ஆறுசக்கரங்களில் குவிகின்றன.

கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐம்பொறிகள் வழியே பிரகாசமான சக்தி அலைகளை அனுப்பும் பெற்றுக்கொள்ளும் உணர்வுப்பூர்வமான அமைப்பாக மனம் விளங்குகிறது.

மனித உடலாகிய தொழிற்கூடத்தை இயக்கும் உயிர் முறைக்கணினி ஆக முதுகுத்தண்டு விளங்குகிறது. ஆறு சக்கரங்களும், தத்தமக்கிடையேயும் செயல்படும், சூட்சுமமான கோளங்களாகும். அவை அவரவரது ஜீன்களின் படி ஆளப்படுகின்றன.

நாடிகளும் உடலிலுள்ள பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்னும் ஐந்து உயிர் வாயுக்களும் இயைந்து முதுகுத்தண்டில் ஒரு ஒளி அமைப்பை ஏற்படுத்துகின்றன!

இந்த சூட்சும ஒளி அமைப்பு ஆறு சக்கரங்களின் வழியாக நிலைபடுத்தப்பட்டு மின்காந்த சக்தியைக்கொண்ட அதிர்வுகளைக்கொண்ட அமைப்பை பெற்று இருக்கிறது.

உள்ளங்களிலும், பாதங்களிலும், உச்சியிலும், நாபிக்குக்கீழேயும் இதன் அதிர்வலைப் புள்ளிகளின் கட்டுப்பாட்டு நிலைகள் உள்ளன. டி.என்.ஏ. எனப்படும் மனிதத்திசு/செல்லின் அடிப்படையான ஜீன் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதாக தெரிந்தாலும் உண்மையில் திரைக்கு பின்னிருந்து இயக்கும் ஆறு சக்கரங்களே உண்மையான கட்டுப்பாட்டு நிலையங்கள்!

மனித உடலானது உள்ளுணர்வால் ஆளப்படுகின்ற நல்ல கட்டமைப்புடன் கூடிய வளர்சிதை மாற்றங்களை உடைய ஸ்தூல உடலையும் கொண்ட, சூட்சுமமான மின்காந்த வலைப்பின்னலால் ஆன சூட்சும உடலையும் கொண்ட மின்காந்த மின்கலன் அமைப்பாகத் திகழ்கிறது.

இதற்கு மேல் சஹஸ்ரார சக்கரம் மத்தியக் கட்டுப்பாட்டு அறையாகத் திகழ்கிறது. இது ஏழாவது சக்கரமாக கொள்ளப்படுகிறது. இந்த சக்தி நிலைகளுக்கு அப்பால் 108 கிளை நிலைகள் மர்மஸ்தானங்கள் இருக்கின்றன.

இதயத்தில் இருக்கும் 3 நாடிகள் மனோவாகநாடி, ப்ராணவாக நாடி, ரஸவாக நாடி, என்பன ஆகும். இதில் மனோவாக நாடி என்பது மனதிற்கானது இது உடல் முழுதும் வியாபித்திருக்கிறது. சிந்தனை, ஞாபக சக்தி, தகவல் தொடர்பு, உணர்வுகள், பகுத்தறிவு, ஆகியவற்றுக்கு காரணமானது.

பிராணவாக நாடி என்பது சுவாசத்திற்குப் பொறுப்பானது ரஸவாக நாடி என்பது நிணம் மற்றும் பிளாஸ் மாவுக்கானது இது உணர்வின் சாரம் ஒவ்வொரு திசு செல்லுக்கும் போய்சேரக் காரணமாகிறது.

பிற 10 நாடிகள்

மேற்சொன்ன 3 நாடிகள் தவிர வேறு 10 நாடிகளுக்கம் அடிப்படையான இடமாக இதயம் இருக்கிறது. இந்த 10 நாடிகளும் மேற்சொன்ன 3 நாடிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை.

இப்பத்து நாடிகளில் 3 நாடிகள் முக்கியமானவை இவை முதுகெழும்பின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்கின்றன. இவை மூன்றும் மீதி 7 நாடிகளையும் ஊடறுத்துச் செல்கின்றன. இட, பிங்கள, சூஷ்மன, நாடிகள் என்று சொல்லப்படும் இவை பிராணவாயுவினை எடுத்துச்செல்கின்றன.

இதயச் சக்கரம்

பத்து நாடிகளும் இதயத்தை பிற சக்கரங்களுடன் இணைக்கின்றன. இதயச்சக்கரம் உள், வெளி உலகங்களை ஊடறுத்துச் செல்வதாகவும், தெய்வசக்தி உடனான பாலமாகவும் திகழ்கிறது.

உறவுகளுடனான தொடர்பு பிறர் மீது அக்கறை கொள்ளுதல் கிரக்கம், கருணை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

சுயபச்சாதாபம், தனிமை, வருத்தம், துக்கம் ஆகிய இதயத்தை சுற்றிச்சேருகின்ற சேருகின்ற உணர்வுகளின் முதன்மையான மையமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு சக்கரமும், பற்பல சக்திப்பாதைகளை சந்திக்கும் ஊடறுக்கும் விதத்தில் இருந்தாலும் இதயச்சக்கரம் இவற்றோடு கூட வேறு பல சூட்சுமமான பாதைகள் குவியும் இடமாகத் திகழ்வதால் அவை இதயத்தின் ஆரோக்கியத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நேர்கிறது.

உயிர்சக்தியான ஓஜஸ் இருக்குமிடம் இதயம் ஆகும். இதயத்தின்செயல்பாடுகள் உள்ளுணர்வு, மேலும் உயிர் ஆகியவற்றை ஓஜஸே நிலை நிறுத்துகிறது.
சரியான செரிமானம், திசுக்களுக்கு போய்சேரும் போஷாக்கு ஆகியவற்றின் இறுதி வெளிப்பாடு ஓஜஸ் ஆகும். ஆகவே ஓஜஸின் தரம்,குணம் ஆகியவை அக்னியின் பலம், பலவீனத்தைப் பொறுத்தே அமையும்.

ஆனால் மன அழுத்தம், உறவுகளுடன் உள்ள தொடர்பு வாழ்க்கைத்தரம், பழைய அடிபட்ட காயம், ஆகியவை காரணமாக ஓஜஸ் பாதிக்கப்படும் போது இதயத்தின் ஆரோக்கியமும் பாதிக்கிறது.

வாத, பித்த, கப தோஷங்கள்:

இதயம் ஓஜஸ் தவிர வாத, பித்த, கப தோஷங்களுக்கான முக்கிய இடமாகத் திகழ்கிறது. ஏதோ ஒரு அளவில் இந்த 3 தோஷங்களும், இதயத்தில் தங்கி இருக்கின்றன. ஆகவே இந்த 3 தோஷங்களின் நிலைப்பாடும் இதயத்தின் ஆரோக்கியத்தில் அதிக ஆதிக்கம் கொண்டுள்ளன. அது போலவே இதயத்தின் செயல்பாடுகள் உடல் முழுவதும் இத்தோஷங்களின் செயல்பாட்டில், நிலைப்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும்.

இது கானும் பார்த்தவரை இதயமானது வாத, பித்த, கபம் ஆகிய 3 தோஷங்கள் திசுக்களுக்கு போய் சேரும் போஷாக்கு உணவு முறை செரிமான அக்னி ஆகியவை உள்ளடங்கிய நிகழ்வுகள் உடல் முழுவதுமான பிராண வாயுவின் ஓட்டம், மனநலம் மற்றும் மனதின் நிலைப்பாடு உயர்சக்தியுடனான தொடர்பு அன்பு, துக்கம், சுயபச்சாதாபம் போன்ற உணர்வுகள்பலம், உறுதிப்பாடு ஆகியவற்றோடு ஒரு சேர நெருங்கிய தொடர்பு டையதாக இருக்கிறது.

இதய நலம் காப்பதில் ஆயுர்வேதத்தின் அணுகுமுறை:

ஆயுர்வேதம், உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒருங்கிணைந்த நிலையே மனிதனின் முழுமைநிலை எனக்கொள்கிறது. இம்மூன்றில் ஏதாவது ஒன்றின் மாற்றம் ஆதிக்கம் இதயத்தில் மாற்றத்தைக்கொண்டு வரும்

அதுபோலவே இதயத்தை ஊடுருவிச் செல்லும் எல்லாப்பாதையையும் இதயத்தின் ஆரோக்கியத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் பல்வேறு சிகிச்சைமுறைகள், எக்காரணத்துக்காக செலுத்தப்பட்டாலும் மற்றவற்றை இதயத்தையும் பாதிக்கும் ஆகவே கீழ்காணும் சிகிச்சை முறைகளில் நமது உடல் அமைப்பு,
அப்போதைய உடல் நிலை ஆகியவற்றுக்கான ஒன்று அல்லது சில சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். எதுவானாலும் தகுந்த ஆலோசனை பெற்று மேற்கொள்வது அவசியம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker