சரும எரிச்சலை போக்கும் ஐஸ்கட்டி மசாஜ்
வெயிலில் அதிக நேரம் அலைந்து வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றால் ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.
வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்க ஐஸ்கட்டிகளை பயன்படுத்தலாம்.
வெயிலில் அதிக நேரம் அலைந்து வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றால் ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம். அது வெயிலால் ஏற்பட்ட சரும எரிச்சலை போக்க வழிவகை செய்யும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் வெப்ப தாக்கத்தால் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரும். அவர்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ஐஸ்கட்டிகளை பயன்படுத்தலாம். அதன் மூலம் வறண்ட சருமத்தை பொலிவுற செய்யலாம்.
ஒருசிலருக்கு வெயில் காலத்தில் சருமத்தில் பருக்கள் முளைக்கும். அதில் வீக்கமும் உண்டாகும். அதனை போக்க 10 நிமிடங்கள் ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை தன்மை நீங்கி, சருமம் மிருதுவாகும். அதிக எண்ணெய் சுரப்பினை தடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஒருசிலருக்கு சில மணி நேரங்கள் வெயிலில் அலைந்தாலே சருமத்தில் கருமை படிந்துவிடும். அதனை போக்க முகத்திற்கு ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்து வரலாம்.
காலை, மாலை இரு வேளையும் ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்து வருவது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஐஸ்கட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முகத்திற்கு பொலிவு சேர்க்கும்.
ஐஸ்கட்டிகள் மசாஜ் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். அதனால் முகச்சுருக்கம் தவிர்க்கப்படும்.
ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் ஐஸ்கட்டி சேர்த்து மசாஜ் செய்வதன் மூலம் கண் களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்கலாம்.
உதடுகள் மிருதுவாக காட்சியளிக்கவும் ஐஸ்கட்டி மசாஜ் செய்யலாம்.
வெயிலினால் ஏற்படும் முக சோர்வை போக்க ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் மூலம் சருமத்தில் குளிர்ச்சி பரவும். முகம் பளிச்சென்று இருக்கும்.