குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?… இப்படி செய்ங்க… உடனே தூங்கிடும்…
குழந்தையை தூங்க வைக்க ரெம்ப கஷ்டப்படுகிறீர்களா? இந்த வழியை பின்பற்றி பாருங்க
தினமும் உங்கள் குழந்தைகளை தூங்க வைப்பது ஒரு போராட்டமாக இருக்கிறதா.
நாள்தோறும் வேலையை முடித்து விட்டு இரவில் தூங்கும் சமயத்தில் உங்கள் குழந்தைகள் தொந்தரவு செய்கிறார்களா. கவலையை விடுங்க. அவர்களாகவே தினமும் சரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தை அவர்களிடம் கொண்டு வர வேண்டும். அதற்காகத்தான் நாங்க உங்களுக்கு சில டிப்ஸ்களை வழங்க உள்ளோம்.
பொருத்தமான நேரம்
முதலில் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் பொருத்தமான ஒரு படுக்கை நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதற்காக உங்கள் குழந்தையை தயார்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணித்து கொள்ளுங்கள். சீக்கிரமாக படுக்கைக்கு சென்று விட்டால் அடுத்த நாள் காலையிலும் சீக்கிரமாக எழுந்து விடுவார்கள். மேலும் தூக்க நேரத்தில் அறையை இருட்டாக வைத்து கொள்வது அவர்கள் நீண்ட நேரம் தூங்குவதற்கு உதவும்.
ஆடைகளை மாற்றவும்
தூங்குவதற்கு ஒரு 20-30 நிமிடங்களுக்கு முன்னாடி தூங்க வசதியான ஆடைகள், டயப்பர் மாற்றுங்கள். அதிலும் குறிப்பாக, குழந்தைகளுக்கு எப்போதும் ஆடை அணிந்து கொண்டிருக்கப் பிடிக்காது. அதனால்முடிந்தவரை ஆடையில்லாமல் தூங்க வைக்கப் பழகுங்கள். அதன்பின் ஆடையைக் கழட்டி சுதந்திரமாக்கினாலே தூங்கும் நேரம் வந்துவிட்டது என்று புரிந்து கொள்வார்கள்.
இருட்டு அறை
அவர்களை தூங்க வைப்பதற்கு முன் அறையில் போதுமான இருட்டை ஏற்படுத்தி கொள்ளுங்கள். எந்த நைட் பல்பும் தேவையில்லை. திரைச்சீலை கொண்டோ, ஜன்னல்களை மூடியோ அதே இருட்டான சூழ்நிலையை காலையில் அவர்கள் எழுந்திருக்கும் வரை வைத்து இருங்கள். இதனால் அவர்கள் இடையில் எழுந்திருப்பது தடுக்கப்படும்.
மெல்லிசை
படுக்கைக்கு செல்வதற்கு 10-15 நிமிடங்கள் முன் உடைகளை மாற்றி பிறகு மென்மையான தாலாட்டு இசையை அந்த அறையில் இசைக்க விடுங்கள். புத்தகம் அல்லது ஏதாவது பொம்மையை கொண்டு அவர்களை தூங்க வைக்க முயலுங்கள். பக்கத்தில் படுத்து பொம்மையை தூங்க வைக்க சொல்லுதல், பொம்மையை கட்டி அணைத்து கொள்ளுதல் போன்ற செயல்கள் மூலம் அவர்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தலாம்.
கதை சொல்லுங்க…
அவர்கள் படுத்ததும் அவர்களுக்கு கதை சொல்லலாம். அவர்களின் முதுகை தட்டிக் கொடுத்தவாரே கதையை நீங்கள் சொல்லிக் கொண்டே இருந்தாலே போதும். அவர்களுக்கு கதை புரிகிறதா என்பது முக்கியமில்லை உங்களின் அரவணைப்பும் உங்களின் இதமான குரலும் அவர்களை இதமாக தூங்க வைக்கும். அவர்களும் ஆழ்ந்து உறங்கி விடுவார்கள். இந்த பழக்கங்களை தினசரி நீங்கள் பின்பற்றினாலே போதும் உங்கள் குழந்தையும் எளிதில் தூங்க கற்று கொள்வார்கள்.