ஆரோக்கியம்

இத படிச்சதுக்கு பிறகும் நீங்க கிரீன் குடிச்சா உங்கள யார் காப்பாத்துவா?

எல்லாரும் இப்போ உடம்பு குறைக்க பயன்படுத்தும் ஒரு முறை தான் இந்த க்ரீன் டீ பழக்கம். இப்பெல்லாம் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பது தான் பேஷனாகவும் மாறி வருகிறது. ஏன் டிவியில் கூட இதப் பத்தின விளம்பரம் தான் எங்கு பார்த்தாலும்.

அப்படிப்பட்ட இந்த க்ரீன் டீ பழக்கம் நல்லதா? சிலர் நினைக்கிறார்கள் கிரீன் உடல் எடையைக் குறைக்கும். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். இதய நோயைத் தடுக்கும். நமக்கு எந்த வியாதியும் வராது என்று. ஆனால் கிரீன் அதிகம் குடித்தால் கல்லீரல் பாதிக்கும் என்பது எத்தனைபேருக்குத் தெரியும். இதனால் என்ன பயன் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியுமா. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.நச்சுத்தன்மை

க்ரீன் டீயில் ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக குடித்தால் அதுவும் நச்சு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறவாதீர்கள். இதுள்ள சில கெமிக்கல் கலவைகள் நம் உடலில் நச்சுக்களை உண்டாக்குகிறது.

விளைவுகள்

இந்த க்ரீன் டீயில் உள்ள காஃபைன், ப்ளூரின் மற்றும் ப்ளோனாய்டுகள் நமக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை அதிகமாக குடிக்கும் போது கல்லீரல் பாதிப்பு கூட ஏற்படுகிறது. இதிலுள்ள டானின்கள் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான போலி அமிலம், விட்டமின் பி போன்றவற்றை உடல் உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. எனவே இதை சரியான அளவில் பயன்படுத்துவது முக்கியம். எனவே மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நமக்கு நல்லது. மேலும் மற்ற பொருட்களுடன் இது வினைபுரிந்து செயல்படவும் வாய்ப்புள்ளது எனவே கவனமாக பயன்படுத்த வேண்டும்.

காஃபைன்

க்ரீன் டீயில் உள்ள காஃபைன் அளவானது பிராண்ட் பெயரை பொருத்து அமைகிறது. தோராயமாக ஒரு கப் க்ரீன் டீ யில் 35 மில்லி கிராம் அளவிற்கு காஃபைன் இருக்கும். அதிகமான காஃபைன் அருந்தும் போது இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்த அதிகரிப்பு, இன்ஸோமினியா, நடுக்கம் ஏன் சில சமயம் இறப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு மனிதன் 200-300 கிராம் அளவிற்கு காஃபைன்யை சமாளிக்க இயலும்.

WebMD கூற்றுப்படி இளைய வயதை அடைந்தவர்க்கான காஃபின் அளவு 150 – 200 மில்லி கிராம் அளவு இருந்தால் கூட மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. காபி, காஃபைன் பானங்கள் எல்லாம் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.ப்ளூரின்

தேநீரில் இயற்கையாகவே ப்ளூரின் அதிகமாகவே உள்ளது. எனவே அதிகப்படியான க்ரீன் டீ குடிக்கும் போது அதிகமான ப்ளூரின் நமது உடலுக்குள் சென்று வளர்ச்சி தாமதம், எலும்பு நோய், பல் பிரச்சினைகள் என்ற எண்ணற்ற பிரச்சினைகளை வழி வகுக்கிறது.

ப்ளோனாய்டுகள்

க்ரீன் டீயில் உள்ள ப்ளோனாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருப்பதால் நமது செல்களை பாதிப்பிலிருந்து காக்கிறது. ஆனால் அதிகப்படியான ப்ளோனாய்டுகள் நமது உடல் இரும்புச் சத்தை உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. இதனால் அனிமியா (இரத்த சோகை) போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வழக்கமாக நாம் அருந்தும் க்ரீன் டீயின் அளவு கூட நாம் உண்ணும் உணவிலிருந்து 70% இரும்புச் சத்து உறிஞ்சலை தடுக்கிறது என்று லினு பவுலிங் அறக்கட்டளை கூறுகிறது.

தேவையான அளவு

க்ரீன் டீ குடிக்கும் அளவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஒரு நாளைக்கு 5 கப் க்ரீன் டீக்கு மேலாக குடிப்பது தவறு என்கிறார்கள். அதிலும் கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேலாக குடிக்காதீர்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.கவனம்

நீங்கள் உடம்பை குறைக்க முற்பட்டு அனிமியா போன்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிகமான தண்ணீரில் கொஞ்சமாக க்ரீன் டீ கலந்து குடியுங்கள். அளவாக குடித்தால் நலமாக வாழலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker