இப்படி வந்தா ஒடைச்சி விடுவீங்களா?… ரொம்ப டேன்ஞர்… அதுக்கு பதிலா இத செய்ங்க…
உங்கள் முகத்தில் வெள்ளை கொப்புளங்கள் உள்ளதா? கவலைவேண்டாம் இயற்கை சிகிச்சைகள் உங்களுக்கு உதவுகிறது. நம் அனைவரும் நல்ல ஆரோக்கியமான பொலிவான தோற்றதை விரும்புகிறோம்.
ஆனால் தினசரி எண்ணற்ற தோல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அதனால் எல்லாவற்றையுமே நாம் ஒன்று போலவே அணுகுகிறோம். அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு சருமப் பிரச்னைக்கும் காரணங்கள் வேறு. அவற்றை சரியாகப் புரிந்து கொண்டாலே போதும். எந்த சருமப் பிரச்னையையும் மிக எளிதாக சரி செய்துவிட முடியும்.
மிலியா
மிலியா அல்லது பால் புள்ளிகள் என அழைக்கப்படும் இது சிறிய வெள்ளை புடைப்புகள் அல்லது கொப்புளங்கள் கண்களின் கீழ் தோன்றும். இது பெரும்பாலும் கண்கள் கீழ் காணப்படும் என்றாலும் அது நம் மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியிலும் தோன்றும். பொதுவாக இது ஓரிரு வாரங்களுக்குள் மறைந்துவிடும் குழந்தைகளுக்கு இது பொதுவானது என்றாலும்,
பெரியவர்களுக்கு
பெரியவர்கள் மத்தியில் கூட தோன்றும். சில நேரங்களில் இது வாரங்கள், மாதங்கள் என்று நீடிக்கும்.தோலில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற முடியாதா போது , தோலில் உள்ள துளைகளில் அடைப்பு ஏற்படுகிறது.இதன் மூலம் பால் புள்ளிகள் ஏற்படுகிறது. பால் புள்ளிகள் வலிமிகுந்ததாகவோ அல்லது நமைச்சளை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட அது உங்கள் தோற்றத்தில் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை தோற்றுவிக்கிறது.
இதற்கு சில காரணங்கள்
சூரியவெப்பம் , அதிக அழகுசாதன பொருட்களின் பயன்பாடு , ஸ்டெராய்டு கிறீம்களின் நீண்ட காலமாக பயன்படுத்துதல் ஆகியவை காரணமாக இருக்கலாம். பால் புள்ளிகளை போக்குவதற்கான சில இயற்கை வீட்டு வைத்தியம் முறைகள் இதோ
சுகர் ஸ்க்ரப்
சர்க்கரை இயற்கையாகவே உங்கள் தோலில் உள்ள மிலாவை அகற்ற உதவுகிறது. அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாற்றை பிழிந்து 2 தேக்கரண்டி பொடித்த சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சருமத்தில் இந்த கலவையை மெதுவாக தடவவேண்டும் . தடவியபின்பு இதை 20 நிமிடம் விட்டுவிட்டு சுத்தம்செய்யவேண்டும் .ஒரு வாரத்திற்கு இரண்டு முறை என்றகணக்கில் சில மாதங்களுக்கு செய்யவேண்டும்.
சந்தனம் மற்றும் பன்னீர்
சந்தனம் மற்றும் பன்னீர் இரண்டும் மிலியாவை ஏற்படுத்தும் தோலிலிருந்து கூடுதல் எண்ணெய் நீக்க உதவுகிறது. ஒரு மென்மையான பேஸ்ட் செய்ய போதுமான பன்னீர் மற்றும் சந்தனம் இரண்டு தேக்கரண்டி கலந்து குழைத்துக்கொள்ளுங்கள். இந்த பசையை உங்கள் தோலில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் கழித்து . குளிர்ந்த தண்ணீரால் கழுவுங்கள் , பின்னர் உங்கள் முகத்தை உலர வைக்கவும். இதை தினசரியாக சில வாரங்களுக்கு மீண்டும்,மீண்டும் செய்யவும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் தோல் வறட்சி மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் கொடுக்கிறது. ஒரு தேக்கரண்டி சர்க்கரை , தேன் மற்றும் 3 தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும் . அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கி ஒரு சில நிமிடங்கள் மெதுவாக பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்க்கவும் . பின்னர், அதை கழுவி சுத்தம் செய்துவிடுங்கள்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல தோல் பிரச்சினைகளை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இது அதிக எண்ணெய்பசையை கட்டுப்படுத்த உதவுகிறது. ½தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் எடுத்து அது தோல் மீது உறிஞ்சப்படும் வரை மெதுவாக ஒரு வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
நீராவி
நீராவியானது நன்றாக உறிஞ்சும் துளையிடும், இதன் மூலம் இறந்த சரும செல்களை அகற்றலாம். சூடான நீரில் ஒரு நல்ல துண்டை முக்கி எடுங்கள் ,பின்னர் அதிகப்படியான தண்ணீரை பிழிந்து, உங்கள் முகத்தில் ஒரு சில நிமிடங்கள் வரை இந்த துண்டை போட்டுக்கொள்ளுங்கள். சிறிது நேரத்திற்கு பிறகு அதனை அகற்றவும். இரண்டு முறை இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.
பற்பசை
டூத் பேஸ்ட்டில் அதிக அளவில் ஃப்ளோரைடு உள்ளது. இது மிலியா தொடர்புடைய அறிகுறிகள் நீக்க உதவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெலிதாய் தடவவும் பின்னர், சுமார் 25 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் அதை கழுவவும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி எடுத்து, அதை ஒரு பேஸ்ட் செய்ய போதுமான அளவில் தண்ணீர் கலந்து கலக்கவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்தப் பசையைப் பயன்படுத்துங்கள், இந்த பசை உலரும் வரையில் காத்திருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் அதை கழுவவும்.