சமையல் குறிப்புகள்
மரவள்ளிக் கிழங்கு வடை
உளுந்து வடை, பருப்புவடை, வாழைப்பூ வடை தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் அது என்ன புதிதாக மரவள்ளிக் கிழங்கு வடை? சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு – 500 கிராம்
மிளகாய்தூள் – 1 – ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப் பொடி – அரை ஸ்பூன்
எண்ணெய் – 500 கிராம்
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து நன்றாக கழுவிவிட்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.
அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து, நன்கு கயந்துள்ள எண்ணெய்யில் சிறு சிறு வடையாகத் தட்டிப் போடவும். நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எண்ணெயை வடிகட்டி வடையை எடுக்கவும். சுவையான மொறுமொறு மரவள்ளிக்கிழங்கு வடை ரெடி.