வீடு-தோட்டம்

தக்காளி சாஸை எப்படியெல்லாம் க்ளீனிங் வேலைக்கு பயன்படுத்தலாம் எனத் தெரியுமா

நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். சில பேர்கள் இதை விரும்புவதில்லை. அந்த சாஸை வீணாக கீழே போட்டு விடுவார்கள். இப்படி செய்யாமல் அந்த தக்காளி சாஸை சில க்ளீனிங் வேலைக்கு பயன்படுத்தி நாம் பலன் பெறலாமே. இந்த கட்டுரையில் தக்காளி சாஸை எப்படி சிறந்த முறையில் க்ளீனிங் ஏஜென்ட்டாக பயன்படுத்துவது என்பதை பார்க்க போறோம்.

தக்காளி இயற்கையாகவே அசிடிக் தன்மையுடன் காணப்படுகிறது. இதுவே அதை கெட்ச்அப் ஆக பயன்படுத்தும் போது அதிலுள்ள வினிகரால் ரெம்ப அசிடிக்காக இருக்கிறது. எனவே தான் இது சுத்தப்படுத்தும் வேலையை எளிதாக செல்கிறது. இந்த முறை மற்ற க்ளீனிங் முறையை காட்டிலும் ரெம்ப சிக்கனமானது. எளிதாக இயற்கையான முறையில் க்ளீனிங் செய்யலாம்.

எனவே கடினமான வேலை செய்யாமல் எளிதாகவே உங்கள் வீடு மற்றும் தோட்டங்களை சுத்தமாக்கி விடலாம்.



காப்பர்

காப்பர் பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் இதில் ரெம்ப கடினமான விஷயம் அதை சுத்தப்படுத்தி பராமரிப்பது. இதை சுலபமாக்கும் விதமாக தக்காளி கெட்ச்அப்யை பயன்படுத்தி காப்பர் பாத்திரத்தை எளிதாக சுத்தப்படுத்தி விடலாம். தக்காளி சாஸை காப்பர் பாத்திரத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற விடவும். மென்மையான துணியை கொண்டு துடைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும் காப்பர் பாத்திரம் பள பளக்கும். படிந்த கறைகள் இருந்தால் இதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொண்டு கழுவினால் போதும் அதுவும் பறந்து போகும். காப்பர் நகைகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.

பித்தளை

பித்தளை நிறைய வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுகிறது. கதவு கைப்பிடி, வீட்டு பாத்திரங்கள், சிலைகள், குத்து விளக்கு போன்றவை பித்தளையால் ஆனது. இதில் நாளாக நாளாக நிறைய கருப்பு நிற திட்டுகள் படிய ஆரம்பித்து விடும். தக்காளி கெட்ச்அப்பின் அசிடிக் தன்மை இந்த கறைகளை எளிதாக நீக்கிடும். பெரிய பாத்திரத்திற்கு இந்த கெட்ச்அப்யை ஊற்றி துடைத்து கழுவினால் போதும். அதே நேரம் சிறிய பித்தளை பொருட்களை கெட்ச்அப்பிள் ஊற வைத்து கழுவினால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

வெள்ளி

வெள்ளி பாத்திரத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். இது காற்றுடன் தொடர்பு கொண்டு காப்பர் ஆக்ஸைடாக மாறி கருத்து போய்விடும். எனவே இதை போக்க வெள்ளி பாத்திரத்தை தக்காளி கெட்ச்அப்பில் 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். ரொம்ப நேரம் ஊற வைக்க வேண்டாம். இது அசிடிக் என்பதால் இதனால் வெள்ளி நகைகள் பழுதடைய வாய்ப்புள்ளது. பழைய பிரஷ் பயன்படுத்தி கூட தேய்த்தோ அல்லது துணியை பயன்படுத்தியோ கெட்ச்அப்யை பயன்படுத்தி வெள்ளி நகைகளை சுத்தம் செய்யலாம். பிறகு வெதுவெதுப்பான நீரில் முக்கி கழுவி விட்டால் உங்கள் வெள்ளி நகைகள் புதியது போல் ஜொலிக்கும்.

அடுப்பில் கருகிய பாத்திரங்கள்

அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு மறந்து விட்டால் போதும் பாத்திரம் கருகி அடிபிடிச்சிடும். இதை சுத்தம் செய்ய தேய்த்து தேய்த்து கை வலிக்கிறது தான் மிச்சம். ஆனால் என்னவோ கறை போக போகாது. இப்படி கஷ்டப்படுகிற நம்ம இல்லத்தரசிகளுக்கு ஒரு அருமையான டிப்ஸ். இப்படி அடி பிடிச்ச பாத்திரத்தை தக்காளி கெட்ச்அப் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். கெட்ச்அப் தண்ணீர் வற்றாத மாதிரி பார்த்து கொள்ள வேண்டும். இதை இரவு முழுவதும் ஊற வைத்து விட்டால் போதும் அடி பிடிச்ச கறுப்பை காணாமல் செய்து விடுகிறது.



உங்கள் கார் ஜொலிக்க

காரில் படியும் தூசிகறையை தக்காளி சாஸ் எளிதாக நீக்கி விடுகிறது. எனவே உங்கள் கார் புதிது போல் ஜொலிக்கும். இதற்கு எப்பொழுதும் போல் உங்கள் காரை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அலசி விட்டு, துணியில் தக்காளி சாஸை எடுத்து நன்றாக காரின் மேல் தடவி பிறகு தண்ணீர் கொண்டு அலசினால் போதும் எல்லாரும் புது காரா என்று கேட்பார்கள்.

இரும்புத் துரு

உங்கள் தோட்டத்திற்காக பயன்படுத்தும் பொருட்கள் மம்முட்டி, கோடாரி போன்றவைகள் துரு ஏறிப் போய் கிடக்கிறதா. கவலைய விடுங்க இதற்கு தக்காளி கெட்ச்அப் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி விடுகிறது. இது தோட்ட பொருள் களுக்கு மட்டுமில்லாமல் துருப்பிடித்த எந்த பொருட்களை வேண்டும் என்றாலும் எளிதாக சுத்தம் செய்ய முடியும். துருப்பிடித்த பகுதியில் தக்காளி சாஸை தடவி தேய்த்து பிறகு கொஞ்சம் நேரம் கழித்து கழுவினால் போதும் துரு போய்விடும். கொஞ்சம் அதிகமான கறை இருந்தால் வாஷிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கழுவி அதனுடன் கெட்ச்அப் சேர்த்து தேய்த்தால் போதும் துரு காணாமல் போய்விடும்.

தோட்ட கருவிகளை புதிதாக்குதல்

தோட்ட செடிகளை வெட்டும் கருவிகளை கவனமாக குறித்த காலத்தில் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாக்க இந்த தக்காளி சாஸை பயன்படுத்தலாம். இரவில் அந்த வெட்டும் கருவிகள் மேல் தக்காளி சாஸை ஊற்றி நல்லா எல்லா பக்கமும் பரவச் செய்து விட்டு காலையில் தேய்த்து கழுவினால் போதும் புதிய பிளேடுடன் வெட்டும் கருவி ரெடியாகி விடும்.



வளர்ப்பு நாய்களின் துர்நாற்றத்தை போக்க

வளர்ப்பு செல்லப் பிராணிகளான நாய்கள் தாங்கள் செல்லும் இடங்களில் உள்ள வேற மாமிசத்தை உண்பதால் அதன் மீதும் துர்நாற்றம் வீசும். இதை போக்க தக்காளி சாஸை பயன்படுத்தலாம். இந்த தக்காளி சாஸை ஊற்றி அதில் உங்கள் செல்லப் பிராணியை 10-20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும் அதன் மேல் உள்ள துர்நாற்றம் எல்லாம் போய்விடும். பிறகு வளர்ப்பு நாய்க்கான ஷாம்பை பயன்படுத்தி நன்றாக அலசி விட்டால் போதும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker