அழகு..அழகு..

பொலிவான முகம் வேண்டுமா? அப்ப வாரம் ஒருமுறை ஆப்பிளைக் கொண்டு இப்படி மாஸ்க் போடுங்க…

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமிருக்காது என்ற வாக்கியத்தை நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். அது, உண்மை தான். ஆப்பிளில் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும். மேலும் ஆப்பிள் செரிமானத்திற்கு உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து புத்துயிர் அளிக்கவும் செய்யும் என்பது அனைவரும் அறிந்த ஆப்பிளின் மகிமைகளே.

ஆனால் ஆப்பிளை சாப்பிடாமல், அதைக் கொண்டு சருமத்திற்கு எப்படியெல்லாம் பராமரிப்பு கொடுக்கலாம் என்பது தெரியுமா? ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.இப்போது சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும செல்களின் ஆரோக்கியத்தையும், சருமத்தின் மென்மைத்தன்மையையும் அதிகரிக்க ஆப்பிளை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

ஆப்பிளைக் கொண்டு பொலிவான சருமத்தைப் பெற…

ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் – 1
* தண்ணீர் – 1 கப்

எப்படி பயன்படுத்துவது?

* முதலில் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.ஆப்பிளைக் கொண்டு பிரகாசமான முகத்தைப் பெறுவதற்கு…

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

* 1 ஆப்பிள் தோல்
* 1 டீஸ்பூன் தேன்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு ஆப்பிளின் தோலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். * 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

ஆப்பிளைக் கொண்டு பிம்பிளைப் போக்குவதற்கு…

ஆப்பிளில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இது பிம்பிளைக் குறைக்க உதவியாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிள் மாஸ்க் பிம்பிள் தழும்புகளையும், கருமையான புள்ளிகளையும் குறைக்கும். நல்ல மாற்றத்தைக் காண்பதற்கு, இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறைப் பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் – 1
* தேன் – 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு ஆப்பிளை எடுத்து, துருவிக் கொள்ள வேண்டும். பின் அதிலிருந்து சாற்றினை கையால் பிழிந்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.ஆப்பிளைக் கொண்டு வறட்சியான சருமத்தைப் போக்க…

ஆப்பிளில் நீர்ச்சத்து உள்ளது. இது சருமத்தின் வறட்சியைத் தடுத்து, ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் ஆப்பிள் சருமத்திற்கு மென்மைத் தன்மையை வழங்கி, சருமத்தை ஆரோக்கியமாக வெளிக்காட்டும். உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், இந்த மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் – 1/2
* ஓட்ஸ் – 1 ஸ்பூன்
* தேன் – 1 ஸ்பூன்
* முட்டை மஞ்சள் கரு – 1

எப்படி பயன்படுத்துவது?

* ஆப்பிளைத் துருவிக் கொள்ள வேண்டும். பின் ஓட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், வேகமாக ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker