தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தை-வேலை இரண்டையும் வீட்டிலிருந்தே எப்படி சமாளிக்கிறது…

இந்த பரபரப்பான உலகில் நமது பொறுப்புகளை சமநிலைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும் வீட்டிலேயே இருந்து வேலை செய்து கொண்டு வீட்டையும் வேலையையும் ஒரு சேர பார்ப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான காரியம். நிறைய குடும்பப் பெண்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை நிலவும் போது அவர்களால் வெளியே சென்று வேலைக்கு போக முடிவதில்லை.

எனவே தான் அவர்கள் தங்கள் திறமைகளை வீட்டில் இருந்தபடியே காட்ட முயலுகின்றனர். இதற்கு வளர்ந்து வரும் டெக்னாலஜியும் அவர்களுக்கு உறுதுணையாக அமைகிறது. இதனால் அவர்களால் வீட்டில் இருந்தபடியே வேலையும் பார்க்க முடிகிறது. ஆனால் வேலை, அன்றாட குடும்ப பொறுப்புகள் என்ற இரண்டையும் சமன் செய்ய பெரிதும் திண்டாடுகிறார்கள்.



1. லிமிட் வேண்டும்

நீங்கள் தினந்தோறும் வெளியே சென்று வேலை பார்க்கும் போது தானாகவே உங்கள் குடும்ப பொறுப்புக்கும், வேலைக்கும் இடையே ஒரு எல்லைக் கோடு இருக்கும். ஆனால் வீட்டில் வேலை பார்க்கின்ற சூழ்நிலையில் நீங்கள் தான் அந்த எல்லைக் கோட்டை வரைந்தாக வேண்டும்.

ஒரே இடத்தில் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை சந்திக்கும் போது அதை சமன் செய்ய நினைத்தால் தினசரி அதை ஆராய்ந்து பழகுங்கள். இந்த மாதிரியான பெற்றோர்களுக்கு தினசரி வரும் பெரிய பிரச்சினைகளையும் நான்கு வழிகளின் மூலம் சமநிலைப்படுத்த முடியும்.

2. ரூல்ஸ்

நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் பெற்றோராக இருந்தால் தயவு செய்து உங்கள் குழந்தைகளிடம் பொதுவான சில விதிகளை விதியுங்கள். இதன் மூலம் உங்கள் வேலை நேரத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளிடம் தெளிவாக கூறுங்கள்.

3. குழந்தை அழுகை

உங்கள் முக்கியமான பிரச்சினைக்கு தகுந்த மாதிரி விதிகளை உருவாக்கி கொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து அதில் வெற்றி அடைய விரும்பினால் கண்டிப்பாக சுய ஒழுக்கம் உங்களிடம் இருந்தாக வேண்டும். அழுகின்ற குழந்தையையும் அதே நேரத்தில் உங்கள் வேலை கலந்துரையாடலையும் ஒரு சேர சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.



4. வேலைக்கு முதல் இடம்

நீங்கள் ஒரு தொலைத்தொடர்பாளராக, ஏன் ஒரு எழுத்தாளராக ஏன் ஒரு தொழில் புரிபவராக இருக்கலாம். ஆனால் உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் செலவழித்து தான் உங்கள் வெற்றிக்கான வழியை அடைய முடியும். வேலை நேரத்தில் உங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல், சலவை, சமூக ஊடகங்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து கவனச் சிதறல்கள் இல்லாமல் வேலை செய்யுங்கள்.

ஏனெனில் நீங்கள் எவ்வளவு நேரம் வேலை பார்க்க செலவழித்தீர்கள் என்பதை விட எவ்வளவு நேரம் வேலை செய்தீர்கள் என்பது தான் முக்கியம். உங்கள் கவனச் சிதறல்கள் குறைந்தால் வேலை செய்யும் நேரமும் குறையும்.

5. இண்டர்நெட் அவசியம்

எளிதாக வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலும். எந்நேரமும் உள்ள இணையதள இணைப்பு உங்கள் வேலையை எளிதாக முடிக்க உதவும். நீங்கள் இரவு, பகல் என எப்பொழுது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் ஆனால் எவ்வளவு நேரத்தில் அதை முடிக்கின்றீர்கள் என்பது தான் உங்கள் பொறுப்புகளை சமநிலைப்படுத்த உதவும். உங்களுக்கான வேலை விதிகளை வகுத்து செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.



6. டைம் மேனேஜ்மெண்ட்

குழந்தைகளுடன் விளையாடுவது யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் இவர்களுடன் செலவழிக்க தரமான அதேசமயம் அளவான நேரத்தையும் செலவிட வேண்டும். என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா. நீங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் பெற்றோர்களாக இருந்தால் இடை இடையே உங்கள் குழந்தைகளுடன் பேச வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் உங்கள் பாஸ் உங்களுடன் பேசலாம், வேலையில் உங்கள் கவனம் சிதறலாம்.

மேலும் பல வேலைகளில் கவனம் செலுத்தும் போது குழப்பம் அடைந்து வேலையை சரிவர முடிக்காமலும் போகலாம். எனவே இது போன்ற பிரச்சினைகள் வராமல் உங்கள் நேரத்தை ஒதுக்கி கொண்டு செயல்படுங்கள். ஏனெனில் உடல் ரீதியாக மட்டும் ஒரு வேலையை செய்யும் போது கண்டிப்பாக உங்களுக்கு சரியான தீர்வு கிடைக்காது.

7. முழு ஈடுபாடு

வீட்டில் இருந்து வேலை செய்யும் பெற்றோர்கள் பொதுவாக பல பணிகளை செய்யவே முயலுவார்கள். ஆனால் இங்க தான் நீங்கள் புத்திசாலித் தனமாக செயல்பட வேண்டும். உங்கள் குழந்தைகளுடன் மனமும் உடலும் கலந்த ஒரு நல்ல உரையாடலை கொடுக்க நீங்கள் விரும்பினால் கண்டிப்பாக அதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். அவர்களும் காத்திருப்பார்கள்.

ஏனெனில் உங்களின் முழு கவனமும் அவர்கள் மேல் இருப்பதையே அவர்கள் விரும்புவார்கள். எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உங்கள் வேலைகளை கவனத்துடன் முடித்து விட்டு அப்புறம் அவர்களுடன் உரையாடுங்கள், விளையாடுங்கள். அப்பொழுது தான் உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை வாழ்க்கை ஒரு சேர வெற்றி அடையும்.

8. பொறுப்பான பெற்றோர்கள்

குடும்பத்திற்கான நேரமும் குழந்தைகளின் செயல்பாடுகளும் உங்களுக்கு சிறு வயதில் குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால் பெரிய வயது குழந்தைகள் என்றால் கண்டிப்பாக அவர்களுக்கும் சில பொறுப்புகள் இருக்கும். அதையும் நீங்கள் சேர்த்து கவனிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.



9. குழந்தை உறங்கிய பின்

இப்பொழுது உங்கள் வேலை பொறுப்பும் குழந்தைகளின் பொறுப்பும் உங்கள் தலையில் தான் இறங்கும். எனவே வீட்டில் வேலை செய்யும் பெற்றோர்கள் சில வேலை பொறுப்புகளை இரவு நேரத்தில் குழந்தைகள் தூங்கின பிறகு எடுத்து செய்யலாம். அலைபேசியில் பேசுதல், எழுதுதல் மற்றும் மின்னஞ்சல் படித்தல் போன்றவற்றை எந்த இடையூறு இல்லாமல் செய்ய இயலும். ஆனால் இது சில பேருக்கு சிரமமாகவும் இருக்கும்.

10. திட்டமிடல் அவசியம்

நீங்கள் எந்த வேலையை செய்தாலும் உங்கள் வேலையையும் குழந்தைக்கான அட்டவணையும் முன்னுரிமை பார்த்து செயல்படுங்கள். உங்கள் நேரத்தை சரியான வழியில் செயல்படுத்த உங்களால் மட்டுமே முடியும். உங்களுக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்றால் அந்த நேரங்களில் குழந்தைகளின் அட்டவணைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

அதிகப்படியான வேலை இருக்கும் போது குழந்தைகளுக்கான பொறுப்புகளை அவர்களிடமே கொடுத்து செய்ய சொல்லுங்கள். உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தால் கண்டிப்பாக மன அழுத்தம் இல்லாமல் அந்த நாள் செல்லும்.

11. நண்பர்களுக்கு உதவுதல்

நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால் நீங்கள் பணியிடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் உங்கள் வேலை நேரத்தில் நெருங்கிய நபர்கள் தீடீரென்று உங்களை உதவிக்கு அழைக்கலாம், உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களிடம் உதவி கேட்கலாம் இது போன்ற பிரச்சினைகளை தொலைத் தொடர்பாளர்கள் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் தன்னார்வலராக இருப்பதில் வரும் தினசரி பிரச்சினைகளை சமாளிக்க முற்பட வேண்டும். ஒரு உதாரணமாக உங்கள் குழந்தைகளுக்காக பள்ளி நிகழ்ச்சிக்கு நிதி திரட்ட வேண்டும் என்று இருந்தால் நீங்கள் தன்னார்வலராக செயல்படலாம் , அவர்களின் தேவையை அவ்வப்போது அறிந்து கொள்ளலாம், அவர்களுடன் நெருக்கமாக இருக்கலாம்.

ஆனால் இவைகள் எல்லாம் நீங்கள் எப்படி நேரத்தை கையாள்கிறீர்கள் என்பதை பொருத்தும் வேலை, குடும்பம் இவற்றை சமநிலை படுத்துவதில் தான் இருக்கிறது. தன்னார்வ செயல்களில் ஈடுபடும் போதும் முழுமையாக உங்களை அர்ப்பணித்து செயல்பட வேண்டும்.



12. நிதி திரட்டுதல்

உங்கள் குழந்தைகளின் பள்ளி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிக்கு நீங்கள் நிதி திரட்ட முற்பட்டால் கண்டிப்பாக அது உங்களுக்கு ஒரு சவாலாக அமையும். இந்த நவீன தொழில் நுட்பம் உங்கள் நிதி திரட்டுவதற்கு உதவியாக அமையும். இதற்கு நிறைய நன்கொடை நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனவே உங்கள் குழந்தைகளுக்கான நேரத்தை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக செயல்படுங்கள். தன்னார்வ மற்றும் நிதி திரட்டுதல் வழிகளை கண்டறிந்து செயல்படுங்கள். இந்த நான்கு விஷயங்களும் உங்கள் குடும்ப வாழ்க்கை, வீட்டில் வேலை செய்யும் வாழ்க்கையை சமநிலைப்படுத்தும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker