பெண்கள் விரும்பும் நெயில் ஆர்ட்
ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் ட்ரெண்ட் ஆகிறது. அந்த வகையில், தற்போது சிறு குழந்தை முதல் பருவ வயதுப் பெண்கள் வரை பிரியப்பட்டு செய்துகொள்வதுதான் நெயில் ஆர்ட்.
ஸ்டோன்ஸ், க்ளிட்டர்ஸ், ஃபெதர்ஸ், ஸ்டிக்கர்ஸ், பவுடர், பீட்ஸ் போன்றவற்றால் நகங்களை அலங்கரிப்பதே நெயில் ஆர்ட். இதில் ரெகுலர் நெயில் பாலிஷிற்கு பதிலாக ஜெல் பாலிஷ் பயன்படுத்தப்படுகிறது. அன்றாடம் நாம் கைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதால் ரெகுலர் நெயில் பாலிஷ் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நகங்களில் இருப்பதில்லை.
ஆனால் ஜெல் பாலிஷ் ஒன்றரை மாதங்கள் வரை அழியாமல் இருக்கும் என்பதால் மட்டுமே இது நெயில் ஆர்ட்டில் உபயோகப்படுத்தப்படுகிறது. நல்ல பிராண்ட் ஜெல் பாலிஷ் ஃபேன்சி ஸ்டோர்களில் கிடைப்பதில்லை. ஆதலால் ஜெல் பாலிஷ் கொண்ட நெயில் ஆர்ட் பார்லரில் மட்டுமே நேர்த்தியாக செய்யமுடியும். மேட் ஃபினிஷ், பிரெஞ்சு டிசைன், ஷிம்மர் டஸ்ட் என்று வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும், கற்பனைக்கும் ஏற்றவாறு செய்து தரப்படும்.
மேலும் மணப்பெண்களுக்கு அவர்களின் ஒப்பனை, ஹேர் ஸ்டைல், உடையின் டிசைன், உடையின் நிறம் போன்றவற்றிற்கு தகுந்தாற்போல நெயில் ஆர்ட் செய்யப்படும். முதலில் நெயில் ஆர்ட் செய்ய வருபவர்களுக்கு அவர்களின் நகம் நல்ல வளர்ச்சி பெற்றதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நெயில் ஆர்ட் பார்ப்பவர் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். ‘எனக்கு நெயில் ஆர்ட் பண்ண ஆசை.
நகம் வளராமல் அவதிப்படும் பெண்கள் கவலை பட வேண்டாம். அவர்களுக்கான தீர்வுதான் நெயில் எக்ஸ்டென்ஷன்ஸ். இதை நகங்களில் தற்காலிகமாக பொருத்தி அழகு செய்யலாம். நெயில் ஆர்ட் செய்வதற்கு முன்நகங்களை தயார் செய்வது அவசியம். அதற்கு பெயர் ‘ட்ரை மெனிக்யூர்’. அதாவது நகங்களை சுத்தம் செய்து, வெட்டி நகங்களுக்கு நல்ல வடிவம் கொடுப்பதே ட்ரை மெனிக்யூர்.
கால் நகங்களிலும் இதே போன்றுதான் செய்யப்படும். ஓவல், ரவுண்டு, ஸ்கொயர், ஸ்கொயர் வித் ரௌண்டட் எட்ஜஸ், ஸ்டிலேடோ பாய்ன்டட், ஆல்மண்ட் ஷேப், லிப்ஸ்டிக் ஷேப், பெல்லாரினா, ஃபேன் டஸி போன்று பல்வேறு வகை நக வடிவங்களில் தங்களுக்கு பிடித்த வடிவத்தில் நெயில் ஆர்ட் செய்வது அவரவர் விருப்பம். பார்லர்களில்நெயில் ஆர்ட் போட நூறு ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஆகும்.