உறவுகள்

பொதுவா ஆம்பளைங்க இந்த விஷயத்தில் இப்படித்தானாம்… நீங்களுமா?

உணர்வுப்பூர்வமாக முதிர்ச்சி அடையாத ஆண்களுடனான உறவு என்பது மிகவும் சிக்கல்கள் வாய்ந்தது. அவர்கள் உலகத்தை சாதாரணமாக பார்க்க மாட்டார்கள். மற்றவர்களின் நிலையிலிருந்து கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள். அவர்களின் வெவ்வேறு குணாதிசயங்கள் மட்டும் அவர்களை எப்படி கையாள்வது என்பதை பற்றிய ஒரு தொகுப்பு. முதிர்ச்சி அடையாத ஆண்களின் குணாதிசயங்கள் எவை எனத் தெரியுமா

ஒரு ஆண் என்பவன் வெறும் வார்த்தைகளிலும் வெறும் கோட்பாட்டளவில் மட்டுமே ஒரு சரியான மனிதனாக இருக்கிறான். நல்ல அழகாக, நல்ல படித்த, நல்ல வேலை இந்த மாதிரியான குணங்களை மட்டுமே வைத்துத் தான் பெண்களுக்கு மணமகனை தேடவே செய்கின்றனர். ஆனால் உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் உணர்வுப் பூர்வமாக சில ஆண்கள் இன்னும் முதிர்ந்த பக்குவத்தை அடைந்திருக்கவே மாட்டார்கள்.உணர்வுகள்

உணர்வுப்பூர்வமாக முதிர்ச்சி அடைந்த ஆண்கள் தங்கள் உணர்வுகளை சரியாக கையாளத் தெரிவதோடு துணையின் உணர்வுகளையும் புரிந்து நடந்து கொள்வார்கள். உறவில் அவர்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு செயல்படுவார்கள். நமது இளமை காலம் என்பது நிறைய புதிர்களை கொண்ட ஒரு உணர்வுப் பூர்வமான பயணமும் கூட.

உறவில் உணர்வுப் பூர்வமான வாக்கு வாதங்கள் வரும் போது ஒரு முதிர்ச்சி அடைந்த ஆண் தன் தவறுகளை உணர்ந்து கொண்டு எளிதாக பிரச்சினைகளை தீர்க்க முற்படுவான். இதுவே முதிர்ச்சி அடையாத ஆண்கள் தன் தவறுகளையும் உணராமல் எல்லா பழியையும் மற்றவர்கள் மீது சுமத்த மட்டுமே முற்படுவர்.

வாக்குவாதங்கள்

எனவே இந்த மாதிரியான முதிர்ச்சி அடையாத ஆண்களுடனான உறவு என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். நிறைய சண்டைகள், வாக்கு வாதங்களை உறவில் அடிக்கடி சந்திக்க நேரிடும். எனவே அவர்களுடனான உறவு என்பது நமக்கு நிறைய சகிப்புத்தன்மை மற்றும் மன்னிப்பு இவற்றுடன் தொடருவதாக இருக்கும் .அவர்களின் குணங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்

யாரோ ஒருவர் எப்போதும் பொறுப்பு ஏற்க நினைப்பார்கள். இந்த மாதிரியான முதிர்ச்சி அடையாத ஆண்கள் எப்பொழுதும் மற்றவர்களை சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் அடுத்தவர்கள் தான் காரணம் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் பார்வையில் அதை பார்க்கும் படி நம்மால் அவர்களிடம் கூறக் கூற முடியாது. அவர்கள் செய்வது தான் சரி, நாம் செய்வது தவறு என்று விடாப்பிடியாக இருப்பார்கள்.

நம் தவறை பெரிதுபடுத்துதல்

நீங்கள் ஏதாவது ஒரு தவறு செய்து விட்டால் எதையும் தாங்க தயாராகிக் கொள்ளுங்கள். ஏதாவது கடுஞ்சொற்கள், முரட்டுத்தனமான கோபம் இவற்றை கண்மூடித்தனமாக நம் மீது வீசலாம். ஆனால் இதையே அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் அப்படி நடந்து கொண்டால் போதும் அப்பயும் நமக்கு தான் பதிலடி கிடைக்கும். மறுபடியும் நாம் தான் சங்கடத்தில் இருக்க நேரும்.

பாதிக்கப்பட்டது போல் நாடகம் ஆடுவார்கள்

அவர்களின் நாடக் கதைகளுக்கு எல்லாம் இரண்டு பக்கமே இருக்காது. அதில் அவர்கள் ஒருவர் மட்டும் தான் பாதிக்கப்படுவதாகவும் மற்றவர்கள் அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதாக மட்டுமே இருக்கும். எல்லார் இடத்திலும் தான் மட்டுமே பாதிக்கப்படுகிறேன் என்பதை காட்ட முயல்வார்கள்.குறுகிய கால உறவே அவர்களுக்கு நீடிக்கும்

உணர்வுப் பூர்வமாக முதிர்ச்சி அடையாத நபர்கள் நீண்ட கால உறவுக்கு சரிபட்டு வர மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு காதல் வாய்ந்த உறவோ, நிறைய நண்பர்கள் போன்ற வர்கள் இருக்க மாட்டார்கள். நண்பர்களும் இவர்களுடனான பிரச்சினைகளால் எளிதில் எதிரியாகி விடுவர். அப்படிப்பட்ட வெவ்வேறு வகையான ஆண்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

காதல் உணர்வு

உணர்வில் முதிர்ச்சி அடையாத ஆண்கள் குறிகிய காலம் மட்டுமே காதல் உறவில் இருப்பார்கள். இதை விட மற்றொரு புதிய உறவு கிடைத்தால் போதும் அங்கே சென்று விடுவார்கள். அவர்கள் உணர்வுகளை அடுக்கடி மாற்றிக் கொள்வார்கள்.

அம்மாவை போன்ற சாயலை தேடுவார்கள்

இந்த மாதிரியான ஆண்கள் தங்களுக்கான துணையை அவர்கள் அம்மாவின் சாயலிலே தேடுவார்கள். உறவில் அந்த மாதிரியான சாயல் கிடைக்க வில்லை என்றால் அந்த உறவை விட்டு விலகிச் சென்று விடுவார்கள்.

கடைசி நிலை

அவர்கள் துணையின் வேலை, பழக்க வழக்கங்கள் இப்படி எல்லாவற்றையும் பற்றியும் வாழ்க்கை முழுவதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இதையே அவர்களிடம் சொல்ல முடியாது. தன் துணை தன்னை மதிக்க வேண்டும், தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களின் நிலையிலிருந்து கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள்.

பாதுகாப்பற்ற உறவு

வெளியே நம்பிக்கையானவர், நல்லவர், சிறந்தவர் என்று காட்டிக் கொள்வார்கள். ஆனால் உள்ளே பாதுகாப்பற்று இருப்பார்கள். அவரது குறைகளை ஒரு நகைச்சுவையாகக் சொன்னா கூட ஏற்க மாட்டார்கள். அவரை விட சிறந்த துணையை, நண்பர்களை ஏற்க மாட்டார்கள். அவர்களைத் தான் உயர்ந்ததாக நினைக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்களின் துணை ஒரு நகைச்சுவையாகக் கூட அவர்களின் திறமை, அதிகாரம் பற்றி பேச முடியாது.

வேலையில் மட்டுமே ஆர்வமுள்ளவர்கள்

அவர்களின் வேலையில் மட்டுமே ஆர்வம் கொண்டு இருப்பர். பெரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைப்பார்கள். துணையுடன் ஒரு உணர்வுப் பூர்வமாக நேரம் கழிக்க மாட்டார்கள். இவர்களின் வெற்றிக்கு துணை என்ன தான் பக்கபலமாக இருந்தாலும் அதை பாராட்ட கூட மாட்டார்கள்.ஹீரோவாக விரும்புவார்கள்

பிரச்சினையை சந்திக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்து ஹீரோவாக விரும்புவார். அவர் அந்த பிரச்சினையிலிருந்து வெளியே வந்ததும் மற்றொரு பிரச்சினை யுள்ள ஒரு பெண்னை நாடி உதவி செய்வார்கள்.

துயர அனுபவம் கொண்டவர்

இந்த மாதிரியான ஆண்கள் கண்டிப்பாக ஒரு கடந்த கால துயர அனுபவம் கொண்டவர்களாக இருப்பர். தன் துணை வந்து அதிலிருந்து வெளியே வர தனக்கு உதவ வேண்டும் என நடிப்பார்கள். காதலை வெளிப்படுத்தி மீட்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அப்படி செய்தும் வெளியே வர மாட்டார்கள்.

உறவில் உறுதியளிப்பதில் கடினம்

இவர்கள் உண்மையாக காதல், அன்பு இவற்றிற்கு ஏங்குவார்கள். சாதாரண உறவை கொடுக்கும் பெண்னை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்த உறவை கூட அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மாட்டார்கள்.

இதயம் உடைந்த நிலை

கடந்த கால உறவிலிருந்து இவர்கள் வெளியே வர மாட்டார்கள். புது புது அதே மாதிரி உறவுகளையும் ஏற்படுத்தி கொள்வார்கள். ஏதாவது மன முறிவு, பிரிவு ஏற்பட்டால் அந்த உறவில் கோபம் கொண்டு இருப்பார்கள்.

நல்லது எதுவுமில்லை

இவர்களின் வாழ்க்கை முழுவதும் சோகம், அழுகை, கோபம், புகார் இப்படியே செல்கிறது என்று நினைப்பார்கள். தன் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்த யாரும் முயல மாட்டார்களா என்று நினைப்பார்கள். உணர்வுப் பூர்வமாக முதிர்ச்சி அடையாத ஆண்களை சமாளிப்பது எப்படி இந்த மாதிரியான உறவில் நீங்கள் இருந்தாலோ அவரை மிகவும் நீங்கள் காதலித்தால் நாங்கள் கூறும் சில அறிவுரைகளை பின்பற்றுங்கள். இதன் மூலம் உங்கள் உறவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

செய்து காட்டுங்கள்

அவருக்கு சில விஷயங்களை சொல்லி புரிய வைப்பதை விட செய்து காட்டுங்கள். அவர் எளிதாக தன் தவறை புரிந்து கொள்ளவார்.

அம்மாவாக செயல்படாதீர்கள்

அவரது சொந்த பிரச்சினைகளையும் பொறுப்புகளையும் அவரே சமாளிக்கட்டும். அவரது அம்மாவாக உதவி செய்யாதீர்கள். அப்பொழுது தான் அவர்கள் பிரச்சினைகளை அவர்களே சமாளிக்க கற்று கொள்வார்கள்.

அவருடன் சச்சரவு செய்யாதீர்கள்

ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவருடன் சச்சரவு செய்யாதீர்கள் அதை மூடி மறைக்காதீர்கள். அவருக்கு விளக்குங்கள், புரிய வையுங்கள். இதை செய்யாவிட்டால் பெரிய பிரச்சினையாக வளர்ந்து நிற்கும்.நடத்தையை மாற்றுதல்

அவரது நடத்தை என்பது இப்ப வந்தது கிடையாது. பல ஆண்டுகளாக அவரிடம் தொடர்வது. அதை ஓரே இரவில் மாற்ற முடியாது. அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அவரிடம் அமர்ந்து பேசுங்கள். உணர்ச்சி வசப்படும் நபருடன் இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் இவர்களுடன் வரும் பிரச்சினையை முதலில் ஏற்றுக் கொண்டு உறவில் ஈடுபடுங்கள். ஒரு நண்பராக இருந்து அவரை முதலில் மாற்றுங்கள். அப்புறம் திருமண உறவிலோ அல்லது நீடிக்கும் உறவிலோ ஈடுபடுங்கள். இல்லையென்றால் அவர்களை மாற்றுவது கடினம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker