கீழே இப்படி வெடிச்சிருக்கா?… இனி வெட்டாதீங்க… அதுக்கு பதிலாக இத செய்ங்க…
பெரும்பாலும் நம் முடியின் நுனிகளில் ஏற்படும் பிளவுகளை அந்த பகுதியை வெட்டுவதன் மூலம் சரி செய்கிறோம். இந்த முறை உங்களுக்கு அழகான பிளவுகள் இல்லாத கூந்தலை கொடுத்தாலும் ஒரு நிரந்தர தீர்வை நமக்கு கொடுப்பதில்லை. வெப்பமான ட்ரையர் பயன்படுத்துவது, ப்ரஷ் செய்வது, கலரிங் செய்வது மற்றும் பிற காரணத்தால் இந்த பிளவுகள் ஏற்படுகின்றன.
நீங்கள் என்ன தான் பிளவுகள் உள்ள முடிப்பகுதியை நீக்கினாலும் அதை முழுவதுமாக நீக்க முடியாது.
இதற்கு நீங்கள் விலை உயர்ந்த தரமான ஹேர் மாஸ்க் அல்லது சீரம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நாங்கள் கூறும் எளிதான சில வழிகளைப் பின்பற்றினாலே போதும். முடி பிளவுக்காக உங்களுக்கு சில மாஸ்க்களை கூற உள்ளோம். இந்த ஹேர் மாஸ்க்கள் நிச்சயம் உங்கள் முடி பிளவு பிரச்சினைக்கு தீர்வளிக்கும்.
மாஸ்க் #1: தேங்காய் எண்ணெய் சிகிச்சை
முடி பராமரிப்பு என்றாலே தேங்காய் எண்ணெய் தான் முதல் இடத்தை வகிக்கிறது . ஏனெனில் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. முதலில் ஷாம்பு போட்டு அலசி, டவலால் உலர்த்திய பின் கூந்தலில் இதை செய்ய வேண்டும். ஒரு கையளவில் கால் பங்கு தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் கூந்தலின் வேர்ப் பகுதியிலிருந்து நுனி வரை நன்றாகத் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு உங்கள் கூந்தலை ஒரு துண்டை கொண்டோ அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டோ தூக்கி கட்டி நன்றாக மூடிக் கொள்ள வேண்டும். ஒரு 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பிறகு ஷாம்பு போட்டு நன்கு தலையை அலச வேண்டும். (முழுமையாக தேங்காய் எண்ணெயை நீக்க வேண்டாம்). இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இயற்கையான தேங்காய் எண்ணெயில் அதிக அடர்த்தி என்பதால் உங்கள் தேவைக்கேற்ப குறைவாகவே அல்லது அதிகமாகவோ முடியின் வேர்ப் பகுதியில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
மாஸ்க் #2: அவகேடா புரோட்டீன் மாஸ்க்
நீங்கள் அவகேடா மாஸ்க் ஒரு இரவு பயன்படுத்தினால் கூட உங்கள் கூந்தல் உங்களுக்கு நன்றி சொல்லும். ஏனெனில் அந்த அளவுக்கு இதன் போஷாக்கு உங்கள் கூந்தலுக்கு தேவை. ஒரு அவகேடா பழம், ஒரு முட்டை, கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் கலவை போதும் உங்கள் பாதிப்படைந்த முடியை சரி செய்ய. இதை வீட்டிலேயே எளிதாக தயாரித்து பாதிப்பில்லாத அலைபாயும் கூந்தலை பெறலாம்.
செய்முறை:
அவகேடா பழத்தை நன்றாக நசுக்கி ஒரு முட்டையுடன் கலந்து கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை சேர்த்து கண்டிஷனர் பதத்திற்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை கூந்தலின் நுனிகள் வரை தடவி 10-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
மாஸ்க் #3: மீன் எண்ணெய் மாஸ்க்
ஓமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் இயற்கையாகவே மீன் எண்ணெய்யில் இருப்பதால் முடிகளில் ஏற்படும் பிளவை சரி செய்கிறது அது சரிசெய்கிறது.
சில துளிகள் மீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெயை ஒரு கடாயில் சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை இந்த கலவையை சூடுபடுத்த வேண்டும். பிறகு ஒரு பெரிய பெளலிற்கு மாற்றி பிளவுபட்ட முடிகளை இதனுள் நனையுங்கள். முடிகளின் வேர்ப்பகுதிகளில் தடவுவதை தவிருங்கள். முடியை நன்றாகத் தூக்கி கட்டி டவல் அல்லது பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி 40 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு இரண்டு முறை ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் பிளவுபட்ட முடிகள் சரியாகி வளர ஆரம்பித்து விடும்.
மாஸ்க் #4: தேன் மற்றும் ஆலிவ் ஆயில்
கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தைக் கொடுக்கும் கலவையான தேன் மற்றும் ஆலிவ் ஆயில் இந்த முடி பிளவ பாதிப்பை நீக்குகிறது. மேலும் இவை வறண்ட தலைக்குப் போதுமான ஈரப்பதத்தைக் கொடுத்து முடியைப் பொலிவாக்குகிறது.
3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் இவற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையை ஷாம்பு போட்ட முடியில் அப்ளே செய்து 20-30 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு மறுபடியும் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் முடிகளில் ஏற்படும் பிளவுகள் காணாமல் போய் விடும்.
இந்த முறைகள் மூலம் வீட்டிலேயே உங்கள் முடியின் நுனிகளில் ஏற்படும் பிளவுகளை சரி செய்து அசத்தலாம்.