சமுத்ர சாஸ்திரத்தின் படி கண், உள்ளங்கை, நெற்றி துடித்தால் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
பெரும்பாலான நேரங்களில் கண்கள் துடிக்கும் போது, அது நல்லது கெட்டது என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஒவ்வொரு கண்கள் துடிக்கும் போதும் வேறுபடும். ஆனால் இது வெறும் கண்களுக்கு மட்டுமின்றி, உடலின் சில பகுதிகளில் துடிப்பு அல்லது அரிப்பு ஏற்படுவதற்கும் கூறப்படும்.
உடலின் சில பகுதிகளில் துடிப்பு அல்லது அரிப்பு ஏற்பட்டால், அது நம் வாழ்வில் நடக்கவிருக்கும் விஷயத்தை முன்பே அறிவுறுத்துவதாக சமுத்ர சாஸ்திரம் கூறுகிறது. ஆச்சரியமாக உள்ளதா?
ஆம், ஒருவரது உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் அரித்தாலோ அல்லது துடித்தாலோ, அது எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுகிறது. இங்கு எந்த பகுதியில் அரித்தாலோ அல்லது துடித்தாலோ என்ன அர்த்தம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
உடலின் இடது பக்கம்
சாஸ்திரத்தின் படி, ஒருவரது உடலின் இடது பக்கத்தில் தொடர்ச்சியாக அரித்தால், அது ஏதோ ஒரு கெட்ட செய்தி வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். இடது பக்கத்தில் அரிப்பு ஏற்பட்டால், அது குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவருடைய மரணச் செய்தியைக் கேட்கக்கூடும் அல்லது யாரேனும் ஒருவர் வேலையை இழந்த செய்தியைக் கேட்கக்கூடும் என்பதை குறிக்கும்.
உடலின் வலது பக்கம்
ஒருவரது உடலின் வலது பக்கத்தில் துடிப்பை உணர்ந்தால், அதுவும் ஆணாக இருந்தால், அவரை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப் போகிறது என்று அர்த்தம். அதுவே பெண்ணாக இருந்தால், அப்படியே எதிராக கெட்ட செய்தி வரும். அதுவே வலது பக்கம் அரித்தால் நல்ல செய்தியைக் கேட்கக் கூடும். அதுவே வலது பக்கம் அரித்தால் கெட்ட செய்தியைக் கேட்கக் கூடும்.
நெற்றி
ஒருவரது நெற்றியில் அரிப்பு ஏற்பட்டால், அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு சந்தோஷமான விஷயம் ஒன்று நடக்கப் போகிறது என்று அர்த்தம். அதிலும் ஒருவரது நெற்றியின் மையப் பகுதியில் அரிப்பு ஏற்படுமாயின், அவர்கள் விரைவில் வாழ்வில் பண நன்மைகளை அடைவார்கள் என்று அர்த்தம் என சமுத்ர சாஸ்திரம் கூறுகிறது.
கண் துடிப்பு
ஒருவரது இடது கண் துடித்தால், அவர்களை நோக்கி ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். அதுவே ஒருவரது வலது கண் துடித்தால், இனிமேல் அவர்களது கனவு நனவாகப் போகிறது என்று அர்த்தம். அதிலும் பெண்களுக்கு என்றால் இடது கண் துடித்தால் நற்செய்தியும், ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நற்செய்தியும் தேடி வரும்.
கண்கள் துடிப்பது பற்று இன்னும் சில விஷயங்கள்…
ஒருவரது வலது கண்கள் நீண்ட நாட்களாக நீண்ட நேரம் தொடர்ச்சியாக துடித்தால், அவர்களுக்குத் தெரியாமலேயே, அவர்களது உடலில் ஏதோ ஒரு நாள்பட்ட நோய் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் இவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கன்னங்கள் துடிப்பது
ஒருவரது இரண்டு கன்னங்களும் ஒரே நேரத்தில் துடிக்குமானால், விரைவில் அதிக பணம் அவர்களது கையில் சேரப் போகிறது என்று அர்த்தமாம். ஆனால் பணம் கையில் சேருமோ சேராதோ, ஆனால் அனைவருக்குமே ஏற்படாது. மிகவும் அரிதாக தான் சிலருக்கு ஏற்படும். ஆனால் கன்னங்கள் துடிக்குமானால், அவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம் என சமுத்ர சாஸ்திரம் கூறுகிறது.
உதடு துடிப்பது
உங்கள் உதடுகள் திடீரென்று துடிக்கிறதா? அது ஏன் தெரியுமா? உதடுகள் துடித்தால், அது உங்கள் வாழ்க்கையில் விரைவில் புதிய நண்பர்களின் வருகை கிடைக்கும் என்று அர்த்தம். இல்லாவிட்டால், நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பருடன் மீண்டும் இணைவர்.
தோள்பட்டை துடிப்பது
ஒருவர் தங்களது தோள்பட்டையில் துடிப்பை உணர்ந்தால், இவர்கள் விரைவில் நிதி சுதந்திரத்தைப் பெறுவார்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால், இவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது அல்லது வரவிருக்கும் நாட்களில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
உள்ளங்கை துடிப்பது
ஒருவரது உள்ளங்கை அதிகமாக துடித்தால், அவர்களைச் சுற்றி ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். அதாவது அவர்களை நோக்கி ஒரு பெரிய தடை வந்து கொண்டிருப்பதையும், இவர்கள் மிகவும் கவமான இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
விரல்கள் துடிப்பது
ஒருவரது விரல்கள் துடித்தால், அவர்கள் விரைவில் பழைய நண்பர்கள் அல்லது முன்னாள் காதலனை காணும் வாய்ப்புள்ளது என்று அர்த்தம். மேலும் இந்த சந்திப்பால், இவர்களது நட்புறவு சிறப்பாக மீண்டும் தொடரப் போகிறது என்றும் அர்த்தம்.