ஆரோக்கியம்

இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

உலகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் இஞ்சி. என்ன தான் இஞ்சி இந்தியா மற்றும் ஆசியாவைப் பிறப்பிடமாக கொண்டிருந்தாலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சி சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. அதன் மருத்துவ குணத்தினாலும் தான் சமையலில் சேர்க்கப்படுகிறது.

இஞ்சி நாட்டு மருத்துவத்திலும் பெரிதும் பயன்படுகிறது. பழங்காலம் முதலாக இஞ்சி ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இஞ்சியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளதால், இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்க தீர்வளிக்கிறது.



இத்தகைய இஞ்சியை மருத்துவ குணம் கொண்ட தேனுடன் சேர்த்து உட்கொண்டால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இங்கு இஞ்சியை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வயிற்று பிரச்சனைகள் நீங்கும்

வயிற்று பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதுவும் உதவியாக இருக்கும். மேலும் அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். முக்கியமாக தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்சனை அகலும்.

டிஎன்ஏ பாதிப்பைத் தடுக்கும்

நவீன ஆராய்ச்சி ஒன்றில், இஞ்சி ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, உடலைத் தாக்கும் தீங்கு விளைக்கும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். மேலும் இது டிஎன்ஏ பாதிப்பைத் தடுத்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறாமல் தடுக்கும். எனவே நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள்.



இருமல், சளியில் இருந்து விடுவிக்கும்

பழங்காலம் முதலாக இஞ்சி சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக இஞ்சி சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களை சரிசெய்வதோடு, சளி முறிவதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இஞ்சியில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், இறுகி உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றும். நீங்கள் சளி, இருமலால் அவஸ்தைப்பட்டால், தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.

புற்றுநோயைத் தடுக்கும்

நவீன மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இஞ்சியானது உடலைத் தாக்கிய புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கும். எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

பயணத்தின் போது வரும் வாந்தியைக் குறைக்கும்

சிலருக்கு பயணம் மேற்கொண்டால், வாந்தி வருவது போன்ற உணர்வு வரும். இதனாலே பலர் பயணம் மேற்கொள்வதற்கு யோசிப்பர். ஆனால் இஞ்சி இந்த பிரச்சனையைக் குறைக்க உதவியாக இருக்கும். இஞ்சியில் உள்ள மருத்துவ பண்புகள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு, வாந்தி அல்லது குமட்டல் வருவது போன்ற உணர்வைக் குறைக்கும்.

ஆஸ்துமாவிற்கு நல்லது

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லது. பழங்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வளிக்க இஞ்சி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிலும் இஞ்சி சாறு குடிக்கப் பிடிக்காதவர்கள், இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்.

ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்

இஞ்சி மூட்டு வலியைக் குறைக்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளான ஜின்ஜெரால் என்னும் பொருள் தான், ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. ஆகவே ஆர்த்ரிடிஸ் இருப்பவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இரத்த சர்க்கரை அளவு குறையும்

இஞ்சி உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயமும் குறையும். மேலும இது உடலில இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் செய்யும் நொதிகளின் உற்பத்தியிலும் பங்கு கொள்ளும். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.



ஒற்றைத் தலைவலி மற்றும் மாதவிடாய் வலி நீங்கும்

இஞ்சி ஒற்றைத் தலைவலியில் இருந்து இயற்கையாக சரிசெய்யும். மேலும் உடலில் ஏற்படும் பல வலிகளான உடல் வலி, மூட்டு வலி, கால் வலி, மாதவிடாய் கால வயிற்று வலி மற்றும் இதர வலிகளையும் போக்கும். அடிக்கடி உங்களுக்கு உடல் வலி ஏற்படுமாயின், அதனைத் தவிர்க்க தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.

இதயத்திற்கு நல்லது

இஞ்சியில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவும். மேலும் பழங்காலத்தில் இதய பிரச்சனைகளுக்கு இஞ்சி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்படும்.

ஆற்றலை வழங்கும்

இஞ்சி தேன் கலவையில் கார்போஹைட்ரேட் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் தேனில் இனிப்புச் சுவையைத் தரும் சுக்ரோஸ் உள்ளது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றலை வழங்கும். நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட நினைத்தால், அவ்வப்போது தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடுங்கள்.



எடை குறைய உதவும்

எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? உங்கள் எடையைக் குறைக்க இஞ்சி தேன் கலவை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். இதனால் உங்கள் எடை விரைவில் குறைவதைக் காணலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker