ஆரோக்கியம்

முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இங்க ஒரு நிமிஷம் அழுத்தம் கொடுங்க…

அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்த்து முதுகு ரொம்ப வலிக்குதா? உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் முதுகு வலி. இந்த முதுகு வலி பிரச்சனைக்கு ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தாலும், அவற்றால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இன்று ஏராளமானோர் எந்த ஒரு பிரச்சனைக்கும் இயற்கை வழிகளைத் தான் முதலில் நாடுகிறார்கள். இப்படி இயற்கையாக முதுகு வலியில் இருந்து விடுபட அக்குபிரஷர் சிகிச்சை உதவியாக இருக்கும்.

அக்குபிரஷர் என்பது நம் உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தமாகும். இதற்கு பெருவிரல், ஆள்காட்டி விரல் போன்றவை பெரும்பாலும் பயன்படுத்தப்படும். பழங்கால சீன நடைமுறையில் நவீன மருத்துவத்தை விட அக்குபிரஷர் முறைப் படி முதுகு வலிக்கு சிகிச்சை அளித்ததில் சிறப்பான பலன் கிடைத்தது மற்றும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.



2006-இல் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ரிபோர்ட்டில் அக்குபிரஷர் முதுகு வலியைக் குறைப்பதோடு, 6 மாதத்திற்கு முதுகு வலி வராமல் இருந்தது வெளிவந்தது. 2012 இல் வெளிவந்த ஆள்வில் 7 நாட்கள் தொடர்ந்து அக்குபிரஷர் முறைப்படி குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்ததில், நாள்பட்ட முதுகு வலி குறைந்தது தெரிய வந்தது.

மேலும் அக்குபிரஷர் முறையால் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். அதில் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வது, நல்ல தூக்கத்தைப் பெறத் தூண்டுவது, சரியாக சாப்பிடுவது மற்றும் ஒட்டுமொத்தமாக நல்ல உணர்வைக் கொடுப்பது போன்றவை குறிப்பித்தக்கவை.



ஒருவேளை உங்களுக்கு அக்குபிரஷர் முறைப்படி அழுத்தம் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் அல்லது அனுபவமிக்கவர்களைக் கொண்டு அழுத்தம் கொடுங்கள்.இக்கட்டுரையில் முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில அக்குபிரஷர் புள்ளி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அடி முதுகு பகுதி
அடி முதுகு பகுதி

முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்க முதுகின் அடிப்பகுதியில் பல அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகள் கிடைமட்டமாக இடுப்பு பகுதியில் அமைந்துள்ளது. இடுப்பு மற்றும் விலா எலும்புகளுக்கு இடையே ஐந்து முள்ளந்தண்டு எலும்புகள் உள்ளன. இதுவே கீழ் முதுகில் முதுகெலும்பை உருவாக்கும்.
படத்தில் காட்டப்பட்டவாறு முதுகெலும்பின் இடது மற்றும் வலது பக்கத்தில் 2 புள்ளிகள் என மொத்தம் 4 புள்ளிகள் இருக்கும். இந்த நான்கு புள்ளிகளையும் ஒரே நேரத்தில் மென்மையாக 1 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி அழுத்தம் கொடுக்கும் போது, ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை மெதுவாக வெளியிடும் போது, சற்று அதிக அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் அழுத்தம் கொடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு அக்குபிரஷர் முறை தெரியாவிட்டால், அது தெரிந்தவர்களைக் கொண்டு செய்யுங்கள்.
வயிற்றுப் பகுதி

வயிற்றுப் பகுதி

முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்க, வயிற்றில் உள்ள தொப்புளுக்கு 1 1/2 இன்ச்-க்கு கீழே ஒரு புள்ளி உள்ளது. இப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலமும் அடி முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடலின் கீழே பகுதியில் உள்ள தசைகள் வலிமையடையும்.

* தொப்புளுக்கு கீழே ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் என மூன்றையும் வைக்க வேண்டும்.

* பின் மோதிரவிரல் உள்ள பகுதியில் ஒரு நிமிடம் மோதிர விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* இப்படி 2-3 முறை என 10 நிமிடம் இடைவெளிக்கு ஒருமுறை செய்தால், முதுகு வலி சரியாகிவிடும்.



குறிப்பு: இந்த முறையை முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் முயற்சிக்கக்கூடாது. வயிற்று தசைகள் பலவீனமாக இருந்தாலோ, வாய்வு தொல்லை இருப்பவர்களோ, விரல்களுக்கு பதிலாக உள்ளங்கையைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுப்பது நல்லது.

கைப் பகுதி

கைப் பகுதி

கையின் மேல் புறத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், முதுகு வலி குறைவதோடு, அடி மற்றும் மேல் முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகும். அதுவும் ஆள்காட்டி விரலுக்கு கீழே மற்றும் பெருவிரலுக்கு இடையே அழுத்தம் கொடுப்பதன் மூலும், எண்டோர்பின்கள் மற்றும் செரடோனின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படும். எண்டோர்பின்களானவை ஒரு நேச்சுரல் வலி நிவாரணி மற்றும் செரடோனின் நல்ல மனநிலையை உண்டாக்கும்.
* இந்த முறைக்கு தரையில் படுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை ஒன்றாக இணைத்துக் கொள்ளுங்கள். பின் அவ்விடத்தில் மற்றொரு கையில் உள்ள ஆள்காட்டி விரல் கொண்டு 5-10 நொடிகள் அழுத்தம் கொடுங்கள்.

* இப்படி 2-3 முறை செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* இந்த முறையை ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், டென்சன் குறைவதோடு, முதுகு வலி வராமலும் இருக்கும்.



இடுப்பு எலும்பு பகுதி

பிட்டத்தில் உள்ள இடுப்பு எலும்பு பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலமும் முதுகு வலியில் இருந்து விடுபடலாம். அதற்கு படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பிட்டத்திலும் அமைந்துள்ள 2 புள்ளிகளிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்விடத்தில் அழுத்தம் கொடுப்பதால், அடி முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இடுப்பு வலி இருந்தாலும் சரியாகிவிடும்.

* படத்தில் காட்டப்பட்ட இரண்டு புள்ளிகளையும், இடுப்பு பகுதியின் மையப் பகுதியை நோக்கியவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* அதுவும் அவ்விடத்தில் 5 நிமிடம் அழுத்தம் கொடுத்து, பின் மெதுவாக விடுவிக்க வேண்டும். இச்செயலால் முதுகு வலியில் இருந்து விடுபடலாம்.
முமுழங்கால் பகுதிழங்கால் பகுதி

படத்தில் காட்டப்பட்டவாறு இரண்டு முழங்காலின் பின் பகுதியிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், முதுகு வலி குறையும், முதுகு தசைகளில் உள்ள காயங்கள் சரியாகும் மற்றும் முதுகு மற்றும் முழங்கால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

* படத்தில் காட்டப்பட்ட இரண்டு புள்ளிகளிலும் 30 நொடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவும் இரண்டு கால்களிலும் ஒரே நேரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* இப்படி 10-15 நிமிடம் சீரான இடைவெளியில் அழுத்தம் கொடுத்து வந்தால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பாத பகுதி

பாத பகுதி

பாதங்களில் அழுத்தம் கொடுப்பதனாலும், முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு, பெருவிரல் மற்றும் இரண்டாம் விரலுக்கு இடையே 3 இன்ச் இடைவெளியில் அமைந்துள்ள புள்ளியில் 30 நொடிகள் அழுத்தம் கொடுத்து விடுவிக்க வேண்டும்.

* இப்படி ஒரு காலில் செய்து முடித்த பின் மற்றொரு காலில் செய்ய வேண்டும்.

* இச்செயலை 3-4 முறை இரண்டு கால்களிலும் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் ஒரு முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து விடுபடலாம்.

முழங்கை பகுதி



முழங்கை பகுதி

முழங்கை மடிப்பு மத்தியில் அழுத்தம் கொடுப்பதனால், நாள்பட்ட அடி முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் பெருவிரல் பயன்படுத்தி 2 கையிலும் மாற்றி மாற்றி 30 நொடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி வலது கையில் செய்யும் போது இடது கை பெருவிரலாலும், இடது கையில் செய்யும் போது, வலது கை பெருவிரலாலும் அழுத்தம் கொடுக்க, முதுகு வலி பறந்தோடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker