ஃபேஷன்

ஆண், பெண் சட்டைகளில் பட்டன்கள் நேரெதிர் பக்கம் அமைந்திருப்பது ஏன் தெரியுமா?

சிலருக்கு இந்த விஷயம் தெரியாமல் கூட இருக்கலாம். ஆம், ஆண்களின் சட்டையில் பட்டன்கள் வலதுபுறமும், பெண்களின் சட்டையில் பட்டன்கள் இடதுபுறமும் அமைந்திருக்கும்.

இந்த விஷயம் தெரிந்த சிலருக்கும் கூட, இந்த அமைப்பு எதற்காக பின்பற்றப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து தெரியாது.



மண்டையைப் குழப்பும் இந்த விஷயத்திற்கு பின்னணியில், இதற்கு இவை எல்லாம் தான் காரணம் என ஒருசில தியரிகளும், கூற்றுகளும் கூறப்படுகின்றன.

ஆனால், இதுதான் சரியான காரணம் என இதுநாள் வரை எதுவும் ஊர்ஜிதமாக நிரூபிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

இனி, இதன் பின்னணியில் கூறப்படும் காரணங்கள் குறித்து பார்க்கலாம்….

காரணம் #1

பழங்காலத்தில் வசதியான ஆங்கிலேயே பெண்களுக்கு அவர்களது பணிப்பெண்கள் தான் ஆடை உடுத்தி விடுவார்கள். இதற்கு, காரணம் ஆண்களின் உடைகள் மிக எளிமையாக உடுத்தும் வகையிலும். பெண்களின் ஆடை, சிலரின் உதவியோடு உடுத்தும் வகையில் கடினமாக இருந்ததுதான்.



காரணம் #2

பெரும்பாலும், அனைவரும் வலது கை பழக்கம் உடையவர்களாக தான் இருப்பார்கள். எனவே, பணிப்பெண் உடுத்திவிடும் போதும் வசதியாக இருப்பதற்காக தான் பெண்களின் சட்டைகளில் பட்டன்கள் இடதுபக்கமாக வைக்கப்பட்டன. அது, இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது.

காரணம் #3

போர் காலங்களில் ஆண்கள் தங்கள் வலது கைகளில் கத்தி வைத்திருப்பார்கள். இதனால், இடது கை மூலமாக அவர்களது சட்டை பட்டன்களை அவிழ்ப்பது அவர்களது எளிதாக இருக்கும். அதனால் கூட, ஆண்களின் சட்டைகளுக்கு வலது பக்கமாக பட்டன்கள் வைத்திருக்கலாம்.

காரணம் #4

மேலும், பெண்கள் இடது மார் மூலமாக தான் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவார்கள். இதற்கு இடது பக்கமாக பட்டன்கள் இருந்தால் தான் சற்று எளிதாக இருக்கும். இதுக் கூட பெண்களின் சட்டைகளுக்கு இடது பக்கமாக பட்டன் அமைந்திருப்பதற்கான காரணமாக இருக்கலாம்.



காரணம் #5

ஒரு தியரியில், பெண்களின் ஆடைகளை பெண்களே தான் ஆடை வடிவமைப்பு செய்துக் கொண்டனர் என்றும். அதில், பட்டன் வைப்பதும் கூட அவர்களே, அவரவர் உடைகளுக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால், அவர்கள் இடது புறமாக வைத்திருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

காரணம் #6

முந்தைய காலங்களில் பெண்களுக்கான உடைகள் வடிவமைத்து, அவர்களுக்கான கலை வேலைகள் செய்ததென அனைத்தும் பெண்கள் தான். ஆதலால் கூட இந்த இந்த பட்டன் அமைப்பு மாறி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கருத்தும், முன்பு கூறப்பட்டிருந்த தியரியும் ஒரே மாதிரி ஒத்துப்போகிறது. ஆயினும் கூட இது தான் உண்மையான காரணம் என எதுவும் நிரூபிக்கப்படவில்லை.



காரணம் #7

1840-50 களில் பெண்களின் ஆடையில் பட்டன்கள் வைப்பது இடதுபுறமா, வலதுபுறமா என்ற கருத்தில் 50:50 என சராசரி வகிதம் இருந்தாலும், 1860களில் உலகளவில் பெண்களின் உடையில் பட்டன் இடதுபுறமாக வைக்கப்படுவது கடைப்பிடிக்கப்பட்டது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker