கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்க இதை யூஸ் பண்ணுங்க!
சிலருக்கு முகம் என்ன தான் அழகாகவும், நிறமாகவும் இருந்தாலும் கூட கழுத்தில் உள்ள கருவளையங்கள் அவர்களது அழகையே சீர்குலைப்பதாக இருக்கும். கழுத்தில் உள்ள கருமையானது, வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் அந்த இடத்தில் கருமையாகிவிடுகிறது.
இந்த கருமையை வேறும் சோப்பு கொண்டு போக்குவது கடினம். அதே சமயத்தில் நீங்கள் முகத்திற்கு என்ன தான் அலங்காரம் செய்து இருந்தாலும் கூட, கழுத்தில் கருமை இருந்தால் உங்களது முகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். கழுத்து என்ன இவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று தான் மனதிற்குள் நினைத்துக் கொள்வார்கள்… இத்தகைய சர்ம சங்கடமான நிலை உங்களுக்கு தேவை தானா?
எனவே தான் உங்களுக்காக இந்த பகுதியில் சில இயற்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி உங்களது கழுத்தில் உள்ள கருமையை போக்கிக் கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வரும் போது நல்ல பலன் கண்கூடாக தெரியும்.
1. கற்றாழை :
கற்றாழை ஜெல்லில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளது. மேலும் இது சிறந்த ஸ்கின் லைட்னரும் கூட. எனவே இந்த ஜெல்லை கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இல்லாவிட்டால், தினமும் இரவில் படுக்கும் முன் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவலாம். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.
2. எலுமிச்சை சாறு :
பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.
3. வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
4. பேக்கிங் சோடா :
4-5 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை, 1-2 டேபிள் ஸ்பூன் நீருடன் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி உலர வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் வெளியேற்றப்படும்.
5. தேன் :
1/2 டீஸ்பூன் பட்டை பொடியில், 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இந்த முறையினால் கழுத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, தழும்புகள் இருந்தாலும் மறைந்துவிடும்.
6. ஆரஞ்சு தோல் :
ஆரஞ்சு தோல் சரும செல்கள் புதுப்பிக்க உதவும். மேலும் இது சிறந்த ஸ்கரப்பரும் கூட. எனவே சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
7. தக்காளி :
தக்காளியை சாறு எடுத்து, அதனை கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை மறைந்துவிடும்
8. ஆப்பிள் சீடர் வினிகர் :
ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, காட்டனை பயன்படுத்தி கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை என, தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் கழுத்தில் உள்ள கருமை மறையும்.
9. இளநீர் :
இளநீர் கூட கழுத்து கருமையை மறைக்க உதவும். அதற்கு இளநீரை கழுத்தில் தினமும் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் கழுத்தில் உள்ள கருமை மட்டுமல்லாமல், தழும்புகளும் மறையும்.
10. சந்தனப் பொடி :
பொதுவாக சருமத்தின் நிறம் அதிகரிக்க சந்தனப் பொடி கொண்டு ஃபேஸ் பேக் போடப்படும். அத்தகைய சந்தனப் பொடியை கழுத்தில் தடவி வர, கழுத்தில் உள்ள கருமை வேகமாக மறையும். அதற்கு இரவில் படுக்கும் முன், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
11. கோதுமை மாவு :
கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.
12. பப்பாளி பழம் :
பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
13. முட்டைக்கோஸ் :
முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.
14. பாசிப்பயறு மாவு :
பாசிப்பயறு மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.
15. பால், தேன் :
கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.
16. ஆலிவ் ஆயில் :
ஆலிவ் எண்ணெயுடன் பயித்தம் பருப்பு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து அந்த கலவையை கழுத்தை சுற்றி நல்ல பசை போல் தடவி வர கருமை நீங்கும்.
17. மைதா மாவு :
வாரத்திற்கு மூன்று முறை மைதா மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி நன்கு பசை போல் தடவி முப்பது நிமிடம் கழித்து கழுத்தை கழுவ கழுத்தில் ஏற்பட்ட கருமை போகும்.
18. வெண்ணெய் :
வெண்ணெயுடன் கோதுமை மாவை கலந்து நன்கு பசை போல கழுத்தை சுற்றி , முப்பது நிமிடம் கழித்து கழுத்தை கழுவி தடவி வர கழுத்தின் கருமை நீங்கும்.