பெற்றோரின் வளர்ப்பு தவறு என்பதை உணர்த்தும் குழந்தையின் செயல்கள்
1. குழந்தைக்கு அடிக்கடி பரிசுகளை அளிப்பது, அவர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். பின் அவர்கள் ஒரு பொருளை உங்களிடம் கேட்டு நீங்கள் வாங்க தாமதமானாலோ அல்லது மறுத்தாலோ குழந்தை வெறி பிடித்தவரை போல் கத்தி, உங்களை மிரட்டி, உங்களிடம் சண்டை கூட போட நேரிடலாம்..!2. குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்டதையெல்லாம் நீங்கள் வாங்கித்தந்து விடுவது, அவர்களுக்கு கஷ்டம் என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் போகச் செய்துவிடும். இதனால் குழந்தைகளால் சிறு துயரத்தையும், தோல்வியையும் தாங்க முடியாத நிலை ஏற்படும்..!
3. குழந்தை சிறு சிறு வேலை செய்வதற்கு நீங்கள் பணம் அல்லது சாக்லேட் அளித்து பழக்கப்படுத்துவது, அதனிடம் லஞ்ச குணத்தை ஏற்படுத்திவிடும். இது குழந்தை எந்த செயல் செய்தாலும், தனக்கு ஏதேனும் ஒரு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்திவிடும். படிப்பில் ஊக்கப்படுத்த பொருள் அளிப்பது வேறு; உதவி செய்ய அல்லது அவர்தம் கடமையை செய்ய பொருள் அளிப்பது தவறு.!
4. கூடப்பிறந்தவர்களுடனோ அல்லது சக தோழர்களுடனோ தகுந்த காரணம் இல்லாது அடிக்கடி குழந்தை சண்டை பிடித்தால், அது உங்கள் தவறான வளர்ப்பை சுட்டிக்காட்டும் ஒரு சிறந்த அறிகுறி..! தான் பெரியவன் மற்றவர்கள் சிறியவர்கள் என்ற அகம்பாவ குணத்தை இந்த சண்டைகளின் வெற்றி, குழந்தையின் மனதில் ஏற்படுத்திவிடும். ஆகையால், குழந்தைகள் வீணாக சண்டையிடுவதை தடுத்து கண்டிக்க வேண்டும்.!
5. குழந்தைகளை நன்கு வளர்க்கவில்லையெனில் அது அவர்களிடத்தில் மரியாதையின்மையை ஏற்படுத்திவிடும். இதனால், குழந்தைகள் மற்றவர்கள் பெற்றோர்கள் என யாரையும் மதிக்காது, வளர்ந்து வாழ நேரிடும்..!
6. குழந்தைகள் கவனிக்கப்படாமல், கண்டிக்காமல் வளர்க்கப்பட்டால், அவர்கள் செய்யும் செயல்களின் விளைவுகள் நல்லதா கெட்டதா என அறிந்து கொள்ளும் திறன் அவர்களில் வளராமல் போய், குழந்தையின் எதிர்காலம் கெட்டுவிடும்.! ஆகையால் குழந்தைகளை கண்டித்து வளருங்கள்; கண்டிப்பதால் உங்களுக்கு குழந்தையின் மீது பாசம் இல்லை என்றாகிவிடாது. கண்டிப்பினை அடியினால் அல்லாமல், அன்பான முறையில் கூட வெளிப்பதாலாம்.