அழகு..அழகு..புதியவை

அட! முகத்துக்கு எதுவுமே தடவ வேண்டாம்… ஐஸ் கட்டி மட்டும் போதும்… மாற்றத்தை நீங்களே பாருங்க

ஐஸ் கட்டிகள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சருமப் பராமரிப்புகளில், மிகவும் மலிவான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் இந்த ஐஸ் கட்டி. மலிவானதாக இருந்தாலும் இதனுடைய பயன்கள் அளவிட முடியாதது. அதனால் எப்போதுமே ஒரு பொருளின் விலையை வைத்து அந்த பொருளினுடைய பயன்பாட்டை மதிப்பிடக் கூடாது. இந்த ஐஸ் கட்டிகளைப் பற்றியும் அதனால் உண்டாகும் அதிசயிக்கத்தக்க பலன்களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.

சன்பர்ன் வெயிலில் சுற்றித் திரிந்துவிட்டு வந்தபிறகு நம்முடைய முகத்தை நம்மாலேயே பார்க்க சகிக்காது. முகம், கை, கால் என சருமம் முழுக்க எரிச்சல் உண்டாகும். சில சமயம் வலிக்கக்கூட செய்யும். அதுபோன்ற சமயங்களில் இந்த ஐஸ் கட்டிகள் தான் உங்களைக் காப்பாற்றும். குறிப்பாக அபப்டியே வெறும் ஐஸ் கட்டிகளைப் பயய்படுத்துவதை விடவும் கூட, ஆலிவேரா ஜெல்லை ஐஸ் டிரேயில் போட்டு ஐஸாக்கி அதன்பின் அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆலிவேரா ஜெல்லிற்குப் பதிலாக வெள்ளரிக்காயையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கண் வீக்கம் உடனே குறைய சரியான தூக்கமின்மை, கணினி முன்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் கண்கள் லேசாக வீக்கம் ஏற்படுவது போன்ற விஷயங்கள் உண்டு. ஐஸ் கட்டிகளை சாதாரணமாக தண்ணீர் மட்டும் ஊற்றி ஐஸ் டிரேயில் வைக்கலாம். அதைவிட தண்ணீருடன் பால், க்ரீன் டீ போன்றவற்றைச் சேர்த்து ஐஸ் டிரேயில் வைக்கலாம்.

எப்படி அப்ளை செய்ய பொதுவாக ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அப்ளை செய்து மசாஜ் செய்து சில நிமிடங்கள் உலர விட்டுப் பின் முகத்தை டவலால் துடைத்துக் கொள்ளுங்கள்

பருக்கள் குறைய முகப்பருக்களைத் தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஐஸ் கட்டிகள்தான். பருகு்கள் வந்துவிட்டதல் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை. ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும். குறிப்பாக, முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker