சிட்டு குருவி லேகியத்தின் ரகசியங்கள் தயாரிப்பு முறை
நவீன அறிவியல் வளர்ச்சியில் சிட்டுகுருவி காணமல் போனதா?..அன்றைய பாரம்பரிய அறிவியல் சாஸ்திரத்தில் சிட்டுகுருவி லேஹ்யம் செய்து சிட்டுகுருவியை காணாமல் செய்து விட்டோமோ என்று பட்டிமன்றமே வைக்கலாம்.
போக உணவர்வை அதிகரிக்க –போலி மருத்துவர்கள் உபயோகப்படுத்தியதே இந்த மாய வார்த்தை –சிட்டு குருவி லேகியம்..
ஜீவகாருண்யம் பேணுகிற சித்தர்களா –சிட்டு குருவிகளை அழித்து லேஹியம் செய்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தான்- மருத்துவர் அவர்கள் கூறிய தகவல் உண்மை என்று உணர முடிந்தது ..
நீர்முள்ளி விதையின் குழு உரிச்சொல் (பரிபாஷை ) சிட்டுக்குருவி .
நீர்முள்ளி விதை சிட்டுக்குருவியின் விருப்பமான உணவுகளில் ஒன்று ..
விந்துவை கட்டும் –போக உணர்வை அதிகபடுத்தும் சிட்டுக்குருவி லேஹியதில் –சிட்டுக்குருவியே இல்லை எனபது தான் உண்மை என உணர முடிகிறது ..
சிட்டு குருவி லேஹ்யம் எப்படி செய்யலாம் வீட்டிலே ?
ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,தக்கோலம் ,அதிமதுரம் ,மாயக்காய், அதிவிடயம் ,குரோசனி,திரிபலை ,தாளிசபத்திரி ,தகர விதை ,பூனைகாலி விதை ,திரிகடு ,செண்பக மொட்டு ,கொட்டம்,வால்மிளகு ,கஞ்சா (இதற்க்கு பதில் கசகசாவிதை ),முந்திரி பழம், நாட்டு சர்க்கரை ,கற்கண்டு ,அபின் (இதுவும் இப்போது கிடைக்காது –சேர்க்க முடியாது ),தாற விதை –இவை எல்லாம் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு –நீர்முள்ளி விதை (சிட்டு குருவி ) தேவையான் அளவு பால் ,நெய் சேர்ந்து செய்யலாம் சிட்டு குருவி லேகியம்.
பரிபாஷை தெரியாதவன் மருத்துவன் ஆக முடியாது என்பற்கு உதாரணம் இந்த சிட்டு குருவி லேஹ்யம் ..
போலி மருத்துவரிடம் –ஆண்மை குறைவுக்கு மருந்து எடுத்து ஏமாற வேண்டா