தலைக்கு எத்தனை முறை ஷாம்புவை பயன்படுத்தலாம்
தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று அதிக முறை ஷாம்புவை பயன்படுத்துவது கூந்தலின் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
தலைக்கு எத்தனை முறை ஷாம்புவை பயன்படுத்தலாம்
உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பது என்பது நல்லதல்ல. அப்படி தினமும் குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிப்பது தான் சிறந்ததும் கூட.
ஷாம்புவை ஸ்கால்ப்பிற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். முடியின் முனை வரைப் பயன்படுத்தினால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் முடியில் உள்ள இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, முடியின் முனைகளில் வெடிப்புக்களை ஏற்படுத்திவிடும். அதுவே ஸ்காப்பிற்கு மட்டும் போட்டு அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் ஸ்கால்ப்பை வறட்சி அடையாமல் தடுக்கும்.
தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று இரண்டு முறை ஷாம்பு போட வேண்டாம். அப்படி ஷாம்பு போட்டால், அவை தலையில் உள்ள எண்ணெய் பசை அனைத்தையும் முற்றிலும் வெளியேற்றி, ஸ்காப்பின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும். எனவே ஒருமுறை ஷாம்பு போடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஷாம்பு போட்டு குளித்த பின்னர், முடியின் முனைகளில் மட்டும் மீண்டும் கண்டிஷனர் தடவி அலச வேண்டும்.
எப்படி துணியைத் துவைக்கும் முன், நீரில் ஒருமுறை அலச வேண்டுமோ, அதேப்போல் தலைக்கு ஷாம்பு போடும் முன் முடியை நீரில் நன்கு அலச வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள மயிர்துளைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற உதவியாக இருக்கும்.