உறவுகள்புதியவை

காதலர் தினத்துக்கு எந்த நிற ஆடை போடப் போறீங்க…

காதலர் தினத்தன்று புதிதாக காதலை யாரிடமாவது சொல்ல விருப்பமா? அல்லது உங்களிடம் யாராவது ஐ லவ் யூ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

அப்படின்னா அதுக்கேற்ற கலர் டிரஸ் போட்டுட்டு போனா கண்டிப்பாக காதல் சக்சஸ்தான். காதலர் தினத்தன்று நம்முடைய காதல் நிலவரம் எப்படி இருக்குன்னு நாம போடும் உடையின் நிறத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். இப்படிச் செய்வதன் மூலம் சில பல கலவரங்களைத் தவிர்க்க முடியும்.

காதலர் தினத்தன்று அணியும் உடைகளின் நிறத்திற்கு சிறப்பு அடையாளம் வைத்திருங்கின்றனர் காதலர்கள். நீங்க புதுசா லவ் பண்ற ஐடியால இருக்கீங்களா? அப்படீன்னா இதப் படிங்க.

பச்சை நிறமே பச்சை நிறமே உங்களைக் காதலிக்க நான் ரெடி. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவதே பச்சை நிறம்.


காதலை ஏற்றுக்கொண்டேன் இப்பொழுதுதான் காதலை ஏற்றுக்கொண்டேன் என்பதை உணர்த்துவதே ரோஸ் நிறம்.

நான் ரெடி நீங்க ரெடியா? இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. என் இதய அறை இன்னும் காலியாகவே உள்ளது. யார் வேண்டுமானலும் அப்ளை செய்யலாம் என்பதை உணர்த்துவதே நீல நிறம்.

நான் காதலிக்கிறேன் எனக்கு காதல் செட் ஆயிருச்சி. நான் ஏற்கனவே காதலிக்கிறேன், நீங்க வேற ஆளைப் பார்க்கலாம் என்பதை உணர்த்துவது வெள்ளை நிறம்.

நிச்சயம் செய்ய ரெடி காதலிப்பது மட்டுமல்ல நான் நிச்சயம் செய்ய ரெடி என்று உணர்த்துவதே செம்மஞ்சள் நிறம்.




காதலுக்கு நான் ரொம்ப தூரம் காதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது. என்னை ஆளை விடுங்க என்று உணர்த்துவது சிவப்பு நிறம்.

அதேபோல் கிரே கலர் உடையும் காதலில் விரும்பம் இல்லை என்பதை உணர்த்துமாம். இந்த ‘பார்ட்டிங்களைப்’ பார்த்தா திரும்பிப் பார்க்காமல் போய் விடுவது நல்லது.

காதல் நிராகரிக்கப்பட்டது காதலை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை நிராகரிக்கப்பட்டது என்பதை உணர்த்துவது கறுப்பு நிறம்.

காதல் தோல்வி நான் ஏற்கனவே லவ் பெயிலியர், அதாவது இவர்கள் காதல் பரீட்சை எழுதி பெயிலானவர்கள். இதை உணர்த்துவது மங்களகரமான மஞ்சள் நிறம்.

Related Articles

6 Comments

  1. Most often since i look for a blog Document realize that the vast majority of blog pages happen to be amateurish. Not so,We can honestly claim for which you writen is definitely great and then your webpage rock solid.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker