உறவுகள்புதியவை

பெண்களின் அழகைத் தவிர இந்த 5 விஷயங்களும் ஆண்களுக்கு பிடிக்குமாம்..

பொதுவாக ஒரு பெண் பார்த்ததும் அழகா இருந்தால் தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்ற தப்பான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் பெண்களிடம் உள்ள வேறு சில விஷயங்கள் கூட ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். எனவே காதல் என்பது வெளிப்புற தோற்றத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே உருவாகுவதில்லை. எப்படி ஆண்களின் பேச்சு, கம்பீரம், வீரம் இவைகள் எல்லாம் பெண்களுக்கு பிடிக்குமோ அதைப் போல பெண்களின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு இவைகளைக் கூட ஆண்கள் ரசிப்பார்களாம். ஆண்களை ஈர்ப்பதில் பெண்களின் இந்த வித்தியாசமான குணநலன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அப்படி ஆண்களை கவர பெண்களிடம் உள்ள மேலும் சில சிறப்பம்சங்களை நாம் அறிந்து கொள்வோம்.

​ஒரு பெண்ணின் நம்பிக்கை

வாழ்க்கையில் நம்பிக்கை உடைய பெண் உயர்ந்த சுயமரியாதை கொண்டவளாக காட்சி அளிக்கிறார். எனவே தான் நம்பிக்கை உடைய பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அவர்களை மணந்து கொண்டால் வாழ்க்கையில் நம்பிக்கையையும் பக்கபலத்தையும் கொடுப்பார்கள் என்று ஆண்கள் நம்புகிறார்கள். அவளால் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். அவர்களுடன் இருக்கும் ஆண்கள் பாதுகாப்பு உணர்வை பெறுகிறார்கள்.

​நகைச்சுவை உணர்வு

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஒரு விஷயம் ஆகும் . வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு ஒரு அணிகலன் மாதிரி செயல்படும். எனவே நகைச்சுவை உணர்வு மிக்க பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

​பெண்களுக்கென்றே தனி ஸ்டைல்

பெண்களின் நடை, டிரஸ்ஸிங் ஸ்டைல் இவைகள் கூட அவர்களுக்கு ஒரு அணிகலன்களாக செயல்படுகிறது. எனவே தனக்கென்ற ஸ்டைல் வைத்த பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். நன்கு உடை அணிந்த பெண்கள் ஆண்களின் கவனத்தை அதிகளவில் ஈர்க்கிறார்கள்.

​வெற்றி பெற்ற பெண்கள்

பெண்கள் தாங்கள் பெற்ற வெற்றியை அதிக சத்தத்தோடு சொல்வது ஆண்களுக்கு பிடிக்காவிட்டாலும் வெற்றி பெற்ற பெண்கள் ஆண்களை எளிதாக கவர்ந்து விடுகிறார்கள். நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பது, தொழில் ரீதியாக வெற்றிகரமாக செயல்படும் பெண்கள் ஆண்களை அதிகளவில் ஈர்க்கிறார்கள். இது பெண்களுக்கு தாங்கள் பணத்திற்காக மட்டும் ஆண்களுடன் இல்லை என்ற திருப்தியை வழங்குகிறது.

​புத்திசாலித்தனம்

அறிவு இல்லாத பெண்ணை பொதுவாக ஆண்கள் விரும்புவதில்லை. ஒரு பையன் தனது வாழ்நாள் முழுவதையும் தன் துணையுடன் செலவிட திட்டமிட்டால் அவர் ஒரு புத்திசாலித்தனமான பெண்களை இலக்காக தேர்ந்தெடுப்பார். எனவே பெண்களுக்கு புத்திசாலித்தனம், பொது அறிவு மேம்பட்டு காணப்படுவது மிகவும் முக்கியம். வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமும் அறிவும் கொண்ட பெண்ணால் எளிதாக சமாளிக்க முடியும்.

Related Articles

Close