எடிட்டர் சாய்ஸ்புதியவை

பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?

பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.இது பற்றிய ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல் குறித்து பேசுகின்றனர். இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும் போது அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.

35 சதவீதம் பெண்கள் இந்த மாதிரி பரிமாறி கொள்வதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்கள் தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது அந்தரங்கம் தொடர்பான விசியங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் பார்த்தால், பெண்கள் அதிகமாக ஆண்களை பற்றியே பேசுகின்றனர். அதில் 64 சதவீதம் பேர் தங்களது கணவர்களை பற்றியே பேசுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

Related Articles

Close