சமையல் குறிப்புகள்

இடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி

தேவையான பொருட்கள் :

  • பாசிப்பருப்பு – 100 கிராம்
  • நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – 1 கப்
  • முருங்கைக்காய் – 1
  • சாம்பார் வெங்காயம் – 100 கிராம்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  • இஞ்சி – 1 துண்டு
  • பூண்டு – 6 பல்
  • பச்சை மிளகாய் – 5
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
  • நெய், எண்ணெய், உப்பு – தேவைக்கு




செய்முறை:

  • தேங்காய் துருவலை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
  • அதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.
  • அடுத்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்கவும்.
  • நன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.
  • கொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து நுரை பொங்கி வந்ததும் இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.
  • பின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
  • இதனை புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து பரிமாறுவார்கள். சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 





Related Articles

Close