அழகு..அழகு..

கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா?

நமது முதுமை தோற்றத்தை வெளிப்படுத்துவது முதலில் நமது கைகள் தான். ஆனால் சிலருக்கு கைகளில் சின்ன வயதிலேயே சுருக்கங்கள் (Wrinkles Hands) வந்து அவர்களது தோற்றத்தை முதுமையாக காட்டும். இந்த சுருக்கங்கள் நீடித்து இருக்க கூடியவை அல்ல. இந்த சுருக்கங்களை நாம் எளிதாக போக்கலாம்.

இந்த பகுதியில் உங்களது முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த சுருக்கங்களை (Wrinkles Hands) போக்க சில வீட்டிலேயே செய்யக் கூடிய சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி நீங்கள் சிறந்த பலனை பெறலாம்.* தக்காளியை சரி பாதியாக அறிந்து கொண்டு, அவற்றை தங்களது கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து, மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும், இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்.

* வாழைப்பழம் சரும பராமரிப்புக்கு அதிகளவு உதவுகிறது. இந்த வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை (Wrinkles Hands) மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும். இந்த முறையை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.* ஆலிவ் ஆயில் பொதுவாக சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கக்கூடியது, எனவே தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதினால் கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.

* அன்னாசி பழத்தில் விட்டமின் சி அதிகளவு உள்ளது, எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைய செய்ய வேண்டும் என்றால், அன்னாசி பழத்தை பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அவற்றை கை மற்றும் கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், அதன்பிறகு குளிர்ந்த நீரால், கைகள் மற்றும் கால்களை கழுவவும். இவ்வாறு செய்வதினால் கைகள் (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமையான நிறங்கள் மறைந்துவிடும்.Related Articles

Close