இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பப்பாளி.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்..
மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று.
இதனை பல காரணங்களால் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் அறியாத ஒரு சிறப்பு பண்பு பப்பாளிப்பழத்திற்கு இருக்கிறது.
அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளில் பப்பாளியும் ஒன்று என கூறப்படுகிறது. ஏனெனின் பப்பாளி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
அத்துடன் இயற்கையாகவே இதய நோய்களுக்கு காரணமாக இருக்கும் நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஆகியவற்றை நீக்கும் செயன்முறையை செய்கிறது. இதனால் இதய நோயுள்ளவர்கள் தாராளமாக பப்பாளி பழத்தை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து வேறு என்னென்ன வேலைகளை பப்பாளி பழம் செய்கிறது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பப்பாளி பழத்திலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
2. செரிமானத்தை சீராக்கும் என பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். இதற்கான முக்கிய காரணம், புரதத்தை உடைக்கும் ஆற்றல் பப்பாளிக்கு இருக்கிறது. இது தான் செரிமானத்தை சீராக்கி ஆரோக்கியத்தை உடலுக்கு கொடுக்கிறது.
3. பப்பாளியில் ஏகப்பட்ட சத்துக்கள் இருந்தாலும் அதில் முக்கியமானதாக வைட்டமின் C, E மற்றும் பீட்டா கரோட்டின் பார்க்கப்படுகிறது. இந்த வைட்டமின்கள் ஒன்றாக சேர்ந்து கண் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
4. “எடையை சீக்கிரம் குறைக்க வேண்டும்” என நினைப்பவர்கள் காலை எழுந்தவுடன் பப்பாளி சாப்பிடுவது நல்லது. ஏனெனின் பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் வயிற்றில் இருக்கும் செரிமான குழாயை விரிவடையச் செய்து, நாள் முழுவதும் குறைவான கலோரி உட்கொள்ளப்படுவதை உறுதிசெய்கிறது.
5. வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடலாம். இதிலிருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க செய்யும்.