கத்திரிக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது.. நம்பமுடியாத உண்மை
கத்திரிக்காய் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கத்திரிக்காய் பெரும்பாலான நபர்கள் விரும்பி உண்ணும் காய்களில் ஒன்றாகும். இதில் பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் பாதிப்பும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கத்திரிக்காயை அதிகமாக சாப்பிடுவது பைல்ஸ் மற்றும் மூல நோய் பிரச்சனையை ஏற்படு்த்தும். ஆகவே மூலநோய் பிரச்சினை உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்க்கவும்.
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்க்கவும். இதில் ஆக்சலேட் என்ற தனிமம் உள்ளதால் சிறுநீக கல் பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.
செரிமான பிரச்சினை, வாயு பிரச்சினை, வயிற்று வலி பிரச்சினை உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்க்கவும்.
கத்திரிக்காய் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும் என்பதால் மூட்டு வலி பிரச்சினை உள்ளவர்களும் கத்திரிக்காயை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
எடையைக் குறைக்க டயட்டை பின்பற்றுபவர்களும் கத்திரிக்காயை சாப்பிட வேண்டும். ஏனெனில் கத்திரிக்காயை சமைக்க அதிக எண்ணெய் பயன்படுத்தப்படுவதால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்.