முடி கடகடவென வளர வேண்டுமா.. தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க
பெண்கள் அழகை அதிகரிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. தலைமுடிக்கு மேலும் அழகு சேர்க்க தேங்காய் பாலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் தலைமுடியை பாதுகாக்க பெண்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பலவிதமான தயாரிப்புகளை வாங்கி கஷ்டப்படுவதுடன், பணத்தை செலவழிக்கின்றனர்.
ஆனால் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் பால் முடி ஆரோக்கியத்தை எவ்வாறு கொடுக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள தேங்காய் பால் முகப்பொலிவை அதிகரிப்பதுடன், கூந்தல் அழகையும் அதிகரிக்கின்றது.
பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் பாலை முடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் நன்கு வளர்வதுடன், அழகும் அதிகரிக்கும். முடி தொடர்பான பிரச்சினைகளும் நீங்கும்.
தேங்காய் பால் மற்றும் சிறிதளவு பாதாம் எண்ணெய்யை கிண்ணம் ஒன்றில் எடுத்துக்கொண்டு முடியின் வேர்களில் தடவ வேண்டும். இதனை தூங்கும் முன்பு தேய்த்துவிட்டு காலையில் தலைக்கு குளித்துவிடவும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யவும்.
தேங்காய் பாலை முடி மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். நீங்கள் தொடர்ந்து தேங்காய் பாலை முடிக்கு பயன்படுத்தி வந்தால், நிச்சயம் நல்ல மாற்றத்தினை அவதானிப்பீர்கள்.