ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

திக்திக்கும் சுவையில் பூசணிக்காய் அல்வா… எப்படி செய்றதுன்னு தெரியுமா..

பொதுவாகவே இனிப்பு என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயமாகத்தான் இருக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவே வேண்டாம்.

எல்லோருக்குமே பிடித்த இனிப்பு வகை தான் அல்லா. அல்வா வகைகனில் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பிரட் அல்வா, பரங்கிக்காய் அல்வா என்று பல வகைகள் இருக்கின்றன.

பூசணிக்காயை நாம் எப்பொழுதும் குழம்பு அல்லது கூட்டாக செய்து தான் சாப்பிட்டிருப்போம் ஆனால் பூசணிக்காயில் அல்வா செய்யலாம் என்று எத்தனை பேருக்கு தெரியும்.

அந்த வகையில் பூசணிக்காயில் தித்திக்கும் அல்வா எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

 

பூசணிக்காய் – 500 கிராம்

சர்க்கரை – 250 கிராம்

முந்திரி – 12

நெய் – 2 தே. கரண்டி

ஏலக்காய் பொடி – 7-8 கிராம்

கேசரி பவுடர் – சிறிதளவு

எலுமிச்சை சாறு – 1/2 தே. கரண்டி

பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை

உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் பூசணிக்காயை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கி  பூசணிக்காயை நன்றாக துருவி அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விட்டு சக்கையை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காயின் தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் பூசணிக்காய் தண்ணீரை ஊற்றி நன்றாக  கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் துருவி வைத்துள்ள பூசணிக்காயை சேர்த்து 5 நிமிடற்கள் வரை நன்றாக  வேக வைக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். பின் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து 4 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் 1 சிட்டிகை அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வரையில் இடைவிடாமல் களறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் அல்வா நிறம் மாறி அல்வா பதத்துக்கு வந்நதன் பின்னர் அதில் ஒரு சிட்டிகை அளவு பச்சை கற்பூரம் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

பின்னர் வேறொரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்க வேண்டும்.

முந்திரி பொன்னிறமாக மாறியதும் தயார் செய்து வைத்துள்ள பூசணிக்காய் அல்வாவில் சேர்த்து கிளறினால் சுவையான பூசணிக்காய் அல்வா தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker