கால்சியம் குறைபாடு பிரச்சினையுள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிடலாமா..
பொதுவாக நாடுகளில் அதிகமாக சாப்பிடும் பால் பொருட்களில் ஒன்றாக தயிர், நெய் பார்க்கப்படுகின்றது.
நாம் சாப்பிடும் விதத்திகேற்ப தயிரின் சுவை, மணம் மாறுகின்றன
தயிர் நொதித்தலின் விளைவாக உற்பத்திச் செய்யப்படுகின்றது. இந்த செயற்பாட்டினால் புரோபயாடிக்குகள் பாலில் உள்ள லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றன.
மேலும் இவ்வாறு தயாரிக்கப்படும் தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் டி, புரதம் மற்றும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன.
அந்த வகையில் இவ்வளவு ஊட்டச்சத்துக்களை நிறைந்திருக்கும் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. கால்சியம் சத்து உறிஞ்சலுக்கு தேவையான வைட்டமின் டியை தயிர் வழங்குகின்றது. இதனை தினசரி சாப்பிடுவதால் உடலுள்ள கால்சியம் சத்து அதிகரிக்கும் மற்றும் வெறும் தயிர் சாப்பிடாமல் அதோடு ஆளிவிதைகள் மற்றும் சூரியகாந்தி விதை சேர்த்து சாப்பிடலாம்.
2. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், அத்துடன் அத்தியாவசிய தாதுக்கள் அதிகமாக தயிரில் இருப்பதால் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது.
3. தயிரில் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகும். ஏனெனின் தயிரில் லாக்டிக் அமிலம் கூறுகள் எக்ஸ்ஃபோலியேட்டர்களாக செயற்படுகின்றன. இதனால் தினசரி எடுத்து கொள்ளும் பொழுது தழும்புகள், முகப்பரு, பெரிய துளைகள், தோல் பதனிடுதல் மற்றும் நிறமி போன்ற சரும பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
4. ஆண்களை விட பெண்களுக்கு நிறைய நற்பலன்களை தயிர் கொடுக்கின்றது. தயிர் சாப்பிடுவதால் பெண்களின் pH ஐ சமநிலைப்படுத்தப்படுகின்றது. இதனால் பெண்களின் யோனியை பராமரிக்கப்படுகின்றது. ஈஸ்ட் தொற்றுக்களையும் தடுக்க முடியும்.
தயிர் பற்றிய தவறான கருத்துக்கள்
1. தயிர் என்றாலே ஆரோக்கியம் தான் அதன் வடிவத்திற்கேற்ப சுவை மாறுபடுமே தவிர ஆரோக்கியம் மாறாது.
2. தயிர் சாப்பிடுவதால் சிலர் செரிமானம் கடினமாகும் என்பார்கள். ஆனால் தயிர் சாப்பிடுவதால் ரோபயாடிக் விளைவுகள் ஏற்பட்டு செரிமானத்தை எளிதாகிறது.
3. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களால் தயிர் சாப்பிட முடியாது என்ற ஒரு கருத்து இருக்கிறது. இது முற்றிலும் தவறான கருத்து. இயற்கையாகவே கிடைக்கும் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் தயிரில் இருக்கிறது.